(நெவில் அன்தனி)
ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் தடவையாக தங்கப் பதக்கத்திற்காக ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்களாதேஷை இலங்கை சந்திக்கவுள்ளது.
இலங்கையை நடப்பு சம்பியன் இந்தியாவும் பங்களாதேஷை பாகிஸ்தானும் அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிகொண்டதன் மூலம் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடவுள்ளன.
20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர் ரி20 கிரிக்கெட்டுக்கான அரை இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன.
நிஷின் கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் விளையாட்டரங்கில் இந்தியாவும் இலங்கையும் மோதிக்கொண்ட இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
அப் போட்டியில் இஷான் கிஷான் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதமும் ஜஸ்ப்ரிட் பும்ரா, அக்சார் பட்டேல், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் இஷான் கிஷான் 46 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 80 ஓட்டங்களையும் வைபவ் சூரியவன்ஷி 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சஹான் ஆராச்சிகே 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை வெறும் 9.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணியில் ஐவர் ஓட்டம் பெறாததுடன் மூவர் அநாவசியமாக ரன் அவுட் ஆகினர்.
நுவனிது பெர்னாண்டோ (15) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். உதிரிகளாக 11 ஓட்டங்கள் கிடைத்தது.
பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்ஸார் பட்டேல் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் வெற்றி
பங்களாதேஷுக்கு எதிராக நேற்றுக் காலை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.
தௌஹித் ஹிர்தோய் 42 ஓட்டங்களையும் சய்வ் ஹசன் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சுபியான் மோக்கிம் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 11.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அப்துல் சாமத் ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் ஹசன் நவாஸ் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் சய்ம் அயூப் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM