குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!

Published By: Digital Desk 2

01 Oct, 2026 | 04:28 PM
image

ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சொத்து, சுகம் ஆகியவற்றை சேமிக்கவில்லை என்றாலும், பாவங்களை செய்யாமல் புண்ணியங்களை செய்து, நற் பலன்களை சேகரித்து வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினரோ, வாழ்க்கையை அறிவியல் பூர்வமாக பார்த்து வாழ்ந்து வருவதால் ஆன்மீகத்திற்கு மிக மிக குறைவான நேரத்தை மட்டும் ஒதுக்குகிறார்கள்.

ஆனால் இவர்கள்தான் வாழ்க்கையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத சங்கடங்களையும்... அசவுகரியங்களையும் எதிர்கொள்கிறார்கள். இதற்கு முதன்மையான காரணம் குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் மறந்தது தான் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குலதெய்வம் தெரியாதவர்களும் இங்கு இருக்கிறார்கள். குலதெய்வம் தெரிந்திருந்தாலும் அதற்கான முறையான வழிபாட்டை கடைப்பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள்.

ஒருவரது வாழ்க்கையில் வெற்றி என்பது நிரந்தரமாக தொடர வேண்டும் என்றாலும் அதனூடாக அக மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்றாலும் எம்முடைய முன்னோர்களாக கருதப்படும் குலதெய்வத்தின் ஆசியும், அருளும் அவசியம்.  உடனே எம்மில் சிலர் இதனை எப்படி எளிதாக பெறுவது? என கேட்பார்கள். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு எளிமையான மற்றும் சூட்சமமான முறையை குறிப்பிட்டிருக்கிறார்கள்.‌

நாளாந்தம் காலையில் எழுந்ததும் நீராடி உங்களுடைய பூஜை அறையில் அமர்ந்து குல தெய்வத்தை மனதில் தியானித்து,

 'ஓம் தீர்க்க நேத்ராய வித்மஹே
கேளாஹஸ்தாய தீமஹி
தந்நோ குலதேவதா ப்ரசோதயாத்.!

எனும் மந்திரத்தை ஐந்து முறை உச்சரித்து விட்டு, குலதெய்வத்தை வணங்கிட வேண்டும். இந்த மந்திரத்தை நாளாந்தம் நீங்கள் உச்சரித்து வர.... அறிமுகமான மற்றும் அறிமுகமற்ற நபர்கள் மூலமாக உங்களுடைய குலதெய்வம் தொடர்பான தகவல்களை கிடைக்க பெறுவீர்கள்.

வேறு சிலருக்கு குலதெய்வ ஆலயத்தின் பிரசாதம் கிடைக்கப்பெறும். வேறு சிலருக்கு குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்பு உருவாகும். இத்தகைய அறிகுறிகளை உங்களுடைய குலதெய்வத்தின் ஆசியாக கருதி, நீங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் உங்களுடைய வெற்றி நிரந்தரமாகும். செல்வ வளம் செழித்தோங்கும் .மகிழ்ச்சி குடும்பம் முழுவதும் பரவும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோஷம் விலகி, யோகம் கிடைக்க எளிய...

2026-11-14 15:48:47
news-image

களத்திர தோஷம் நீங்க எளிய வழிமுறை...

2026-11-13 15:11:21
news-image

வியாபாரம் செழித்து வளர்வதற்கான பிரத்யேக வழிமுறை 

2026-11-12 15:05:59
news-image

போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான எளிய...

2026-11-11 16:43:16
news-image

பகிர்ந்து கொள்ள இயலாத சிக்கலில் இருந்து...

2026-11-10 15:50:28
news-image

தன வரவு அதிகரிக்கவும், சேமிப்பு உயரவும்...

2026-11-09 16:35:58
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் செப்டிக் ஒர்தரைடீஸ் எனும்...

2026-11-09 16:35:51
news-image

பொருளாதார பற்றாக்குறையை தீர்க்கும் சூட்சம வழிமுறை

2026-11-07 15:47:03
news-image

இருளிலிருந்து ஒளியை நோக்கி : தீபாவளியின்...

2026-11-07 10:35:13
news-image

சுப பலன்களும் கால பகை கிரகங்களும்...

2026-11-06 18:16:42
news-image

கணவன் - மனைவி இடையேயான பிரச்சினையை...

2026-11-05 17:55:25
news-image

தொழில் தடையை நீக்கும் பிரத்யேக அம்மன்...

2026-11-04 14:38:07