மேஷம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் கடகத்தில் நீசம் பெற்ற உச்ச குருவோடு இணைவது வளமும், நலமும் பெற்று செல்வாக்குடன் திகழ்வீர்கள். சொல்லும், செயலும் வல்லமை பெற்று, செலவுகள் ஏதுமின்றி நலம் பெறுவீர்கள். அரசியலில் கொஞ்சம் ஈடுபாடுகள் இருக்கும். உங்களின் ராசிநாதன் நீசமாகி உச்ச குருவுடன் இணைவு பெறுவது பூமி சார்ந்த நல்ல பலன்களைக் கிடைக்கப் பெறுவீர்கள். பாதுகாப்புத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கப்பல் சார்ந்த துறையில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உணவு தயாரிப்பு சார்ந்த கல்வி பயில நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதையும் கேட்டு பெறுவது உங்களின் வாழ்க்கையில் கிடையாது.
கேட்காமல் கிடைப்பதையே விரும்புவீர்கள். உங்களின் சம அந்தஸ்து உள்ளவர்களிடம் தான் அதிகம் பழகுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனைத் தருவார். குருவோடு இணையும் காலம் யோக காலமாக அமையும். கிடைக்காது என்று இருந்த பொருளோ, சொத்தோ உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அமையும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆறில் அமர்ந்து சத்ரு தொல்லைகளை போக்குவார். மறைமுகமாக இடையூறுகளை செய்பவருக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். களத்திர ஸ்தானத்தில் புதனுடன், சுக்கிரன் இணைவு பெறுவது சிலருக்கு பெண்களால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல தொழில் முன்னேற்றமும் தொடர்ந்து கலைத்துறையில் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
இலாபஸ்தானத்தில் ராகு ராசிநாதன் நட்சத்திரத்தில் அமர்வது உங்களின் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்ததை திரும்ப பெறும் வசதியை பெறுவீர்கள். விரைய சனியை உச்ச குருவின் பார்வை பெறுவதால் சனியால் எந்த தொல்லையும் இருக்காது நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் தெளிவான முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருப்பீர்கள்.
நிறங்கள்: ஓரஞ்சு, வெண்மை, பச்சை.
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.
சந்திராஷ்டம நாட்கள்: 13-10-2026 செவ்வாய் இரவு 08.16 முதல் 16-10-2026 வெள்ளி காலை 07.21 மணி வரை.
தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து எருக்கம்பூ மாலை போட்டு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல தடைகளும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்று அமர்வது வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கடல் கடந்த செய்தி நற்செய்தியாக அமையும். மூன்றாம் அதிபதி சந்திரன் ராசியில் உச்சம் பெறுவதும். உங்களின் அதிகார அந்தஸ்தையும், வெளிபடையான பேச்சும் முன்னேற்றமும் மற்றவர்கள் உங்களின் மீது நம்பிக்கையையும் பெறச் செய்யும்.
ராசியில் சந்திரன் உச்சம் பெறுவது அரசியலில் நன்மதிப்பை பெறுவதுடன் ஏளனமாக பேசியவர்கள் உங்களை இரு கரம் கூப்பி வரவேற்பது ஆச்சரியமாக இருக்கும். தனி மனித சுதந்திரத்தை வரவேற்பீர்கள். பொது நலனில் அக்கறைக்காட்டுவீர்கள். ஆதரவற்றவருக்கு உதவி செய்வீர்கள். ஏழாம் அதிபதி செவ்வாய் நீசம் பெற்று குருவுடன் இணைவு பெறுவது கப்பல் துறையின் வேலை தேடுபவருக்கு நல்ல வாய்ப்பு அமையும். உச்ச குரு உயர்வை தருவார். பசியோடு இருப்பவருக்கு அன்னமிட்டு வர தாயார் உடல் நலன் விரைவில் குணம் தரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் இருக்க முன்னோர்களுக்கு திதி, சிரார்த்தம் செய்து பித்ருகளின் நல்லாசியை பெறுவீர்கள். தீர்த்த யாத்திரை நதி நீராடல் போன்றவை பயனுள்ளதாக அமையும். ஆறாமிடத்தில் புதனுடன் ராசிநாதன் இணைவு பெறுவது உயர் கல்வி தடை நீங்கி நன் மதிப்பைப் பெறுவீர்கள்.
குறுகிய கால தொழில் செய்து வருபவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருப்பது பெரிய முதலீடு செய்து தொழில் செய்பவருக்கு வியாபாரம் சற்று மந்த நிலையில் இருக்கும். நீங்கள் சில நேரம் என்ன செய்வது? என்று அறியாமல் இருப்பீர்கள். லாபஸ்தானத்தில் சனி பலமிழந்து இருப்பதால் வருமானம் சற்று குறைவாக இருக்கும்.
நிறங்கள்: வெண்மை, ஓரஞ்சு, மஞ்சள்.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
கிழமைகள்: வெள்ளி, திங்கள், செவ்வாய்.
சந்திராஷ்டம நாட்கள்:16-10-2026 வெள்ளி காலை 07.22 மணி முதல் 18-10-2026 ஞாயிறு இரவு 07.03 மணி வரை.
தெய்வங்கள்: வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி வெள்ளை நிற பூ வைத்து புளி அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது தொழிலில் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். தொடர்ந்து எதிர்பார்த்த நல்ல பலன்களையும் பெறுவீர்கள். உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள்.
தனஸ்தானத்தில் லாபாதிபதி செவ்வாய் நீசம் பெற்று உச்ச குருவுடன் இணைவு பெறுவதும் நீசம் பெற்ற ராசி அதிபதி சந்திரன் உச்சம் பெறுவதும் நீசபங்கம் பெற்று செவ்வாய் பலம் பெறுவதால் பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். உச்ச குருவின் பார்வை மறைவு ஸ்தானங்களில் அமைவது தடைபட்ட காரியங்களின் வளர்ச்சியை பெறுவீர்கள். பாதுகாப்பு துறையில் பணி செய்பவருக்கு வெகுமதியும், பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். மூன்றில் கேது அமர்ந்து ராசியை பார்வை இடுவது மனவலிமையும் காரியத்தில் நுணுக்கமும் அறிந்து செயல்படுவீர்கள்.
சுகஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது தொழில் வளர்ச்சிக்கும் உத்தியோகத்திற்கும் வளர்ச்சியை பெற்றுத் தரும். பணியில் முன் விரோதம் காரணமாக சிலரின் மறைமுக தாக்குதல் ஏற்பட காரணமாக இருப்பீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு பெறுவது காதலை வெளிபடுத்த நினைப்பவருக்கு நல்ல சந்தர்ப்பம் அமையும். இசை, கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மேன்மை அடைவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வெளிநாட்டு கனவு நிறைவேறும். மனதில் தெளிவு பிறக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வரவுக்குள் செலவு செய்து பணத்தை சேமித்து கொள்வீர்கள். அமைதியான சூழ்நிலையில், வாழ்வீர்கள்.
நிறங்கள்: பச்சை, ஓரஞ்சு, மஞ்சள்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
சந்திராஷ்டம நாட்கள்: 18-10-2026 ஞாயிறு இரவு 07.04 முதல் 21-10-2026 புதன் இரவு 10.24 மணி வரை.
தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடுகள் செய்து நல்லெண்ணெய் தீபமேற்றி எள் கலந்த சாதம் செய்து நைவேத்தியம் வைக்க நீங்கள் நினைத்த காரியம் வெற்றியை தரும்.
கடகம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் உச்சம் பெறுவதும். ராசியில் குரு உச்சம் பெற்று அமர்வதும் உங்களின் வளர்ச்சி படிப்படியாக அமையும். நினைத்ததை விரைவில் அடைவீர்கள். கடந்த கால தளர்ச்சி நிலை மாறி நன்மை பெறுவீர்கள். தாயார் வழி சொந்தங்களின் உதவியை பெறுவீர்கள். செவ்வாய் நீச பங்க ராஜயோகம் பெறுவது எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள். உங்களை மதித்து நடப்பவர்களுக்கு நீங்கள் அனைத்து உதவிகளையும் செய்வீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்க மாட்டீர்கள். தடுமாற்றமான நிலை மாறி வளர்ச்சிக்கு வழியாக அமையும். உச்ச குருவினால் பார்க்கும் இடங்கள் சிறப்பாக அமையும்.
தனஸ்தானத்தில் கேது அமர்வது சிறிது காரிய தடை இருந்தாலும் மனதில் தளர்ச்சி அடையாமல் செயல்படுவீர்கள். படபடப்பாக இருந்த பல காரியம் நன்மையை பெறும். மூன்றாமிட சூரியன் உங்களின் முயற்சிகளுக்கு பக்க பலமாக அமையும். தைரியத்துடன் எந்த காரியத்தையும் செய்வீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் எதையும் விட்டு கொடுக்காமல் இருப்பீர்கள்.
சுகஸ்தானத்தில் சுக்கிரனுடன் புதன் அமர்வது ஆற்றலும் ஆக்க பூர்வமான செயல்களிலும் உங்களை தயார் செய்து கொள்வீர்கள். அட்டம ராகு தடைகளை தருவார். செயல்களில் தாமதம் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் சனி பலம் இழந்து இருந்தாலும் குருவின் பார்வையால் சனியின் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. சில வித எதிர்பார்ப்புகள் தடைபட்டாலும் அதனை எதிர்கொண்டு செயல்படுத்துவீர்கள். சுய முயற்சி நன்மையை தரும். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
நிறங்கள்: வெண்மை, ஓரஞ்சு, மஞ்சள்.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.
சந்திராஷ்டம நாட்கள்:21-10-2026 புதன் அதிகாலை 05.46 முதல் 23-10-2026 வெள்ளி பகல் 02.03 மணி வரை.
தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி எள் கலந்த அன்னம் வைத்து காகத்திற்கு வைத்து வேண்டிக் கொள்ள சகல விதமான காரியமும் வெற்றியை தரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் அமர்வது பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். அரசியலிலும், பொது வாழ்விலும் விரைவான வளர்ச்சியைப் பெறுவீர்கள். கருத்து ஒற்றுமை உள்ளவர்களிடம் தொடர்பு கொள்வீர்கள். அரசியலில் புதிய நண்பரின் தொடர்பு உங்களுக்கு வளர்ச்சியை பெற்று தரும்.
ராசியில் கேது அமர்வது உஷ்ணம் சார்ந்த சில பிரச்சினைகள் உண்டாகும். தோல் ஒவ்வாமை போன்ற உபாதைகள் உண்டாகும். சிலருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மூன்றாமிடத்தில் புதன், சுக்கிரன் இணைவு பெறுவது குடும்பத்தில் சிறு சிறு சச்சரவும், ஞாபக மறதியும் உண்டாகும். சிறிய விபத்துகள் ஏற்படும் மற்றபடி எல்லாம் நன்மையாக அமையும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெறுவீர்கள். காலத்திற்கு தகுந்தபடி உங்களை மாற்றிக்கொண்டு மற்றவர் களிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். புத்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள்.
ஏழாமிடத்தில் ராகு கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பிற மதத்தவரின் உதவியும் கிடைக்கும். அட்டமத்தில் சனி இருந்தாலும் பெரிய பாதிப்பு தரமாட்டார் எனினும் பிணையம் இடுவது தேவையற்ற விடயங்களில் தலையீடு கொள்வது சரியான முடிவு எடுக்காமல் தள்ளி போடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்வது தொழிலில் ஓரளவு நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். அரசியலில் தனித்துவம் கிடைக்கும். விரையத்தில் குருவும், செவ்வாயும் இணைவு பெறுவது பொருளாதாரம் நல்ல வளம் பெற்றாலும் செலவீனங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் வசதியை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
நிறங்கள்: சிவப்பு, பலவர்ணம், வெண்மை.
திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு.
கிழமைகள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
சந்திராஷ்டம நாட்கள்: 23-10-2026 வெள்ளி பகல் 02.04 முதல் 25-10-2026 ஞாயிறு இரவு 08.00 மணி வரை.
தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி செவ்வரளி பூ மாலை இட்டு உங்களின் வேண்டுதனால் சொல்லி வர எல்லாம் நன்மையாக அமையும்.
கன்னி
உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் தனஸ்தானத்தில் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்த இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு மேன்மை உண்டாகும். பாக்கியாதிபதி வீட்டில் சந்திரன் உச்சம் பெறுவது உங்களின் தினம் செய்யும் பணிகள் சிறப்பாகவும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். லாபஸ்தானத்தில் செவ்வாய், குருவும் சேர்ந்து இருப்பது தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். ராசியில் சூரியன் அமர்ந்து ஏழாமிடத்து சனியை பார்வை இடுவது சப்தம பார்வையால் தந்தை மகனின் உறவு பாதிக்கும். காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து மறையும். சிலருக்கு வீட்டை விட்டு வந்து திருமணம் செய்ய முயற்சிகளை செய்வீர்கள். உங்களை மதிப்பவர்களை மதிப்பீர்கள். யாருக்கும் எதையும் சமாதானம் செய்து கொள்ளமாட்டீர்கள். தனஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து எட்டாமிடத்தை பார்வை இடுவதால் தொழிலில் சிலருக்கு கடன் பிரச்சனை பாதிப்பிலிருந்து விடுபட வாய்ப்புகள் இனி அமையும். தனாதிபதி ஆட்சி பெற்று புதனுடன் இணைவது பணபுழக்கம் அதிகரிக்கும். விருப்பபட்ட பொருட்களை வாங்குவீர்கள்.
ஆறாமிடத்தில் ராகு அமர்ந்து உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அனைத்து டெஸ்டிலும் எதுவும் இல்லை என்று சொன்ன பிறகு நமக்கு ஏதோ செய்கிறது என்று எண்ண தோன்றும். ஏழாமிட சனி வக்கிரம் பெறுவது கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும் நீண்ட நாள் நண்பரிடம் உரிமையோடு சில வார்த்தை சொல்ல அவர் உங்களிடம் வருத்தம் கொள்வார்.
பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் உச்சமாக இருப்பதால் செய்யும் தொழிலிலும் பார்க்கும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். லாபஸ்தானத்தில் செவ்வாய் நீசம் பெற்று உச்ச குருவுடன் சேர்வதால் ஒரு மித்த கருத்துள்ள புதிய நண்பர்களின் உதவி கிடைக்க பெறுவீர்கள். நல்ல உள்ளங்களின் அன்பை பெறுவீர்கள். பிடிவாதமான குணங்களை விட்டு விட்டு எல்லோரிடமும் அன்புடன் பழகுவீர்கள். எதிலும் ஈடுபாடுடன் செய்வீர்கள்.
நிறங்கள்: பச்சை, வெண்மை, மஞ்சள்.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
சந்திராஷ்டம நாட்கள்:25-10-2026 ஞாயிறு இரவு 08.01 முதல் 27-10-2026 செவ்வாய் இரவு 11.57 மணி வரை.
தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வெற்றிலை மாலை போட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர வேண்டியவை விரைவில் நடக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலேயே அமர்ந்து ஏழாமிடத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் ஸ்தானத்தில் பலம் உங்களின் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். லாப ஸ்தானத்தில் கேது அமர்வது தடைபட்ட காரியம் கைகூடும். சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
உங்களின் ராசியில் பாக்கியாதிபதி புதனுடன் ராசிநாதன் சுக்கிரன் இணைவு பெறுவது மனவலிமையும், நேர்மை மற்றும் உண்மையுடன் செயல்படுவீர்கள். எதிலும் சாதூர்யமாக செயல்படுவீர்கள். எப்பொழுதும் யாருக்காவது எதையாவது நன்மை செய்து கொண்டே இருப்பீர்கள். பொது நலன் கருதி சில விடயங்களில் நீங்களே தலையிட்டு நல்ல பலனை அனைவரும் பெறும் படி செய்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்வது எடுத்த காரியம் சில தடைபட்டாலும் உங்களின் விடாமுயற்சியின் காரணமாக எளிதில் முடிப்பீர்கள். உடல்நலனின் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை நோய்கள் இருப்பவர்கள். காலை பாத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். மறைமுகமான எதிரிகள் பலதரப்பட்ட சிரமத்தை தரவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
அட்டமத்தில் சந்திரன் அமர்வதால் யாருக்கு பிணையம் இடுவது ஏற்று கொண்டு பணத்தை வாங்கி தருவது போன்ற காரியத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது செய்யும் தொழில் விருத்தியையும் பொருளாதார நன்மையும் தரும். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி உண்டாகும். வெளியூர் செல்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் சுயதொழில் செய்பவரும். உத்தியோகத்தில் இருப்பவரும் வளம் பெறுவீர்கள். மருத்துவ துறையினர் முன்னேற்றம் காண்பீர்கள். லாபஸ்தானத்தில் கேது உங்களின் அனைத்து வசதிகளை பெற்று தருவார்.
நிறங்கள்: வெண்மை, பச்சை, பலநிறம்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு, புதன்.
சந்திராஷ்டம நாட்கள்: 27-10-2026 செவ்வாய் இரவு 11.58 முதல் 29-10-2026 வியாழன் இரவு 02.39 மணி வரை.
தெய்வங்கள்: வெள்ளிக்கிழமைகளின் அம்மன் வழிபாடும் செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரை யும் வழிபட்டு நெய் தீபமேற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல காரியமும் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாகவும் இலக்கை அடையும் தைரியத்தையும் தருவார். பாக்கியாதிபதி சந்திரன் பார்வை ராசிக்கு படுவது மிக சிறப்பான நற்பலனை பெற்று தருவார். உச்சம் பெற்ற குருவின் பார்வை மேலும் வளம் பெற வாய்ப்புகள் அமையும். சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது மிகவும் முன்னேற்றமான காலமாக அமையும். தொட்ட காரியம் தொடரும். வெற்றியைத் தரும். பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்து குரு பார்வைபடுவதால், நன்மை உண்டாகும்.
குலதெய்வத்தின் அனுகிரகம் கிடைக்கும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். புனித யாத்திரை சென்று வர சிலருக்கு நல்ல சந்தர்ப்பம் அமையும். உங்களை இதுவரை வேடிக்கை பார்த்து வந்தவர்களுக்கு உங்களின் செயல்பாடுகளால் ஆச்சரியம் கொள்வார்கள். முறையான உங்களின் செயல்பாடுகள் எப்பொழுதும் நன்மையே செய்யும்.
பாக்கிய ஸ்தான சந்திரன் களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக பெரிய வளர்ச்சியையும், நன்மையும் தரும். உங்களின் யோகாதிபதி வீட்டில் செவ்வாய் ராசிநானுடன் குரு உச்சம் பெற்று இணைவு பெறுவது உங்களின் ஒவ்வொரு காரியமும் வெற்றியையும், மேன்மையும் பெறுவீர்கள். பொருளாதார பெருக்கமும். செய்யும் தொழிலில் வளர்ச்சியையும் பெற்று இலக்கை அடைவீர்கள். தொழில்ஸ்தானத்தில் கேது அமர்ந்து புதிய தொழில் வாய்ப்புகளை அமைத்து கொள்வீர்கள். தொழில் ஸ்தானாதிபதி லாபஸ்தானத்தில் அமர்வது உங்கள் வளர்ச்சிக்கு சரியான பாதையாக அமையும். விரையத்தில் விரையாதிபதி சுக்கிரனுடன் புதன் இணைவு பெறுவது கலைத்துறையினர் அடிக்கடி இரவு நேர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவாயை பெருக்கிக் கொள்வீர்கள்.
நிறங்கள்: ஓரஞ்சு, மஞ்சள், வெண்மை.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு.
கிழமைகள்: செவ்வாய், வியாழன், ஞாயிறு.
சந்திராஷ்டம நாட்கள்: 02-10-2026 வெள்ளி மாலை 06.37 முதல் 04-10-2026 ஞாயிறு இரவு 08.56 மணி வரையும்.
29-10-2026 வியாழன் இரவு 02.40 முதல் 01-11-2026 ஞாயிறு அதிகாலை 04.57 மணி வரையும்.
தெய்வங்கள்: செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும் செய்து தயிர் அன்னம் தானம் கொடுத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர விரைவில் எல்லாம் வெற்றியாக அமையும்.
தனுசு
உங்களின் ராசிக்கு ராசிநாதன் எட்டாமிடத்தில் உச்சம் பெற்று தன ஸ்தானத்தை பார்வை இடுவதும் பஞ்சமாதிபதி செவ்வாய் தனஸ்தானத்தை பார்வை இடுவதும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் சூழ்நிலை அமையும். இம்மாத இறுதியில் நல்ல தொழில் முன்னேற்றமும், பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். அர்த்தாஷ்டம சனி பலமிழந்து காண்பதால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் ராகு அமர்ந்து ராசியை பார்வை இடுவது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தருவார். விவசாயம், அன்றாடம் அழியும் உணவு பொருட்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். இனி அர்த்தாஷ்டம சனியினால் உடல் உபாதைகளின் பாதிப்பு குறையும் வாகன தடைகள், வீடு கட்ட சில தடைகள் விலகி, மீண்டும் வேலையை துவங்குவீர்கள்.
எட்டாமிட அதிபதி ஆறில் அமர்வது மறைமுகமான சில காரிய நன்மையை தரும். பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். வங்கி கடன் பெற்று சிலர் கூடுதல் வட்டியை குறைத்து கொள்வீர்கள். பனிரெண்டுக்குரிய செவ்வாய் எட்டினில் மறைவு பெறுவது தொழில் வாய்ப்பு. விளையாட்டுத் துறையில் நீங்கள் எதிர்பாராத வளர்ச்சியையும் வெற்றி வாய்ப்பையும் பெறுவீர்கள். ராசிநாதன் குரு எட்டாமிடத்தில் உச்சம் பெற்றாலும் உங்களுக்கு பார்க்குமிடம் சிறப்பான பலனை தருவார். யோகாதிபதி சூரியன் வீட்டில் கேது உங்களுக்கு நல்ல தொழிலையும் வேலை வாய்ப்பையும் பெற்று தரும். சூரியன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சனியை சப்தமான பார்வையும் அமைவது சிலருக்கு அரசு துறையில் வேலை கிடைக்கும். லாபஸ்தானத்தில் புதனுடன் சுக்கிரன் இணைவு உங்களுக்கு எல்லாம் வெற்றியே தரும்.
நிறங்கள்: மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
கிழமைகள்: வியாழன், வெள்ளி, ஞாயிறு.
சந்திராஷ்டம நாட்கள்: 04-10-2026 ஞாயிறு இரவு 08.57 முதல் 06-10-2026 செவ்வாய் இரவு 11.55 மணி வரை.
தெய்வங்கள்:வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பொடி மீது ஐந்து நெய் தீபமேற்றி மஞ்சள் நிற துணி சாற்றி கொண்டை கடலை வைத்து வேண்டிக் கொள்ள எல்லா காரியமும் வெற்றியை தரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் மூன்றாமிடத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு பார்வை ராசிநாதனுக்கு கிடைக்கப் பெறுவதும் நல்ல பலனை பெற்று தருவார்கள். சுய முயற்சிக்கு விரைவில் பலன் கிடைக்க பெறுவீர்கள். ராசிக்கு செவ்வாய் குருவின் பார்வையால் மேலும் பலம் பெற்று வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சியை அடைவீர்கள். தனஸ்தானத்தில் ராகு அமர்வது சில காரிய தடை உண்டானாலும் உங்களின் பேச்சு திறமையால் காரிய அனுகூலம் பெறுவீர்கள். ராசிநாதன் சனியின் வக்கிரகதி உங்களின் வளர்ச்சி வழிவகுக்கும். தனிப்பட்ட காரியங்களில் கவனம் செலுத்தி மேன்மையை அடைவீர்கள். சந்திரன் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் காரிய அனுகூலம் பெறுவீர்கள்.
சிலருக்கு காதலை வெளிபடுத்தி, உறுதி செய்து கொள்வீர்கள். மனதில் பட்டதை தைரியமாக வெளிபடுத்துவீர்கள். களத்திர ஸ்தானத்தில் செவ்வாயும், குருவும் இணைவு ஊர் மெச்சும் வகையில் நடக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வருமானத்தையும் சிறு சேமிப்பையும் செய்து வளம் பெறுவீர்கள்.குரு பார்க்க கோடி நன்மை என்பது போல குரு லாபஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலிலும், உத்தியோகத்தில் மேன்மை பெறுவீர்கள். எட்டாமிட கேது காரிய தடை தந்தாலும் சுப கிரகத்தின் பார்வையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களை பெற்று வளம் பெறுவீர்கள்.
பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் அமர்வது உங்களின் தந்தைக்கு உடல்நல குறைவுகள் ஏற்பட வாய்ப்பு அமையும். பித்ரு தோசம் இருப்பவர் தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு அமையும். தொழில் ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு பெறுவது வேலை வாய்ப்பும் புதிய தொழில் அமைக்க உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.
நிறங்கள்: நீலம், ஓரஞ்சு, மஞ்சள்.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
கிழமைகள்: சனி, செவ்வாய், வியாழன்.
சந்திராஷ்டம நாட்கள்:06-10-2026 செவ்வாய் இரவு 11.56 முதல் 09-10-2026 வெள்ளி அதிகாலை 04.21 மணி வரை.
தெய்வங்கள்:சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடுகள் செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து புளி அன்னம் வைத்து தானம் செய்து வர தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்ந்து குரு பார்வை பெறுவது பொருளாதாரத்தில் ஓரளவு நன்மையை பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் தீர்வாகும். பாக்கிய ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு பெறுவது எடுத்த காரியம் கைகூடும். பொறுப்புகளை சிலர் ஏற்று நடத்த வேண்டிவரும். சுயதொழிலில் மேன்மை அடைவீர்கள். ராசியில் ராகு அமர்வது எதையும் எதார்த்தமாக எண்ணாமல் மிகைபடுத்தி பார்ப்பீர்கள். வரவுக்குள் செலவு செய்யாமல் செலவுகளை அதிகபடுத்திக் கொள்வீர்கள். தனஸ்தானத்தில் சனி அமர்ந்து வக்கிரகதி அடைவதும் சில நேரம் காரிய தடைகள் உண்டாகும். சுகஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெறுவது தாயார் உடல்நலன் நன்றாக இருக்கும். தாய்வழி சொந்தங்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை கொண்டு மருத்துவ வசதிகளை பெற்று நலம் பெறுவீர்கள்.
ஆறாமிடத்து செவ்வாய் நீசம் பெற்று விரையஸ்தானத்தை பார்வை இடுவது நிலம் சார்ந்த காரியம் சிறப்பாக அமையும். தண்ணீர் பற்றாகுறை, நீங்கி விவசாயம் சிறப்பாக நடக்கும். தனஸ்தானத்திற்கு அதிபதி குரு ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவதால் பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் கேது அமர்வது கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். தொழில் செய்து வருபவருக்கு கடன் வசதியை பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் வருமானம் கிடைக்கும். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். ஏழாமிட சூரியன் எட்டாமிடத்தில் அமர்வது உத்தியோகம் சிலருக்கு கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தையிடம் சிலர் பகைமை கொள்வார்கள். தந்தை மகனுக்கு கருத்து வேறுபாடு வரும்.
பொது வாழ்வில் இருப்பவருக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அரசியல் பிரவேசம் உங்களுக்கு புதிய அனுபவம் பெற்று தரும். கலைத்துறையினருக்கு முக கவர்ச்சியும் தோற்ற பொலிவும் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் இணைவு பெறுவது மனவலிமையும், துணிச்சலும் கொண்டு செயல்படுவீர்கள். உங்களின் பேச்சிலேயே அனைத்தையும் கவர்ந்து விடுவீர்கள். பொறுப்புகளை தட்டி கழிக்காமல் செயல்பட்டு சிறப்பான முன்னேறுவீர்கள்.
நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு.
கிழமைகள்: சனி, புதன், வெள்ளி.
சந்திராஷ்டம நாட்கள்: 09-10-2026 வெள்ளி அதிகாலை 04.22 முதல் 11-10-2026 ஞாயிறு பகல் 11.06 மணி வரை.
தெய்வங்கள்: ஞாயிறு ராகு காலத்தில் (04.30 - 06.00 மணி) பைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து வித வேண்டுதலும் விரைவில் நிறைவேறும்.
மீனம்
உங்களின் ராசிக்கு ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து குரு பார்வை பெறுவது மிக சிறப்பான பலனாக அமையும். குரு பார்வை பெறும் வரையில் சனியின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. உங்களின் அனைத்து விதமான முயற்சிகளும் முன்னேற்றமான காலமாக அமையும். கொடுத்த இடத்தில் சற்று தாமதமாக பணம் வரும்.
உங்களின் ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்த சனி வக்ரம் பெறுவது உடல்நலனின் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவதிபட வேண்டியதிருக்கும்.. குடும்பத்தில் மன அமைதியுடன் நல்ல பலனையும் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளுக்கு பக்க பலமாக சந்திரன் அமைந்து நன்மை தருவார். தனஸ்தானாதிபதி செவ்வாய் நீசம் பெற்று உங்களின் லாபஸ்தானத்தை பார்வை இடுவது நல்ல முன்னேற்றமாக அமையும். திடமான நம்பிக்கையோடு ஒவ்வொரு காரியமும் பார்த்து பார்த்து செய்வீர்கள்.
விளையாட்டு துறையில் ஒரு படி மேலே சென்று வளர்ச்சியை அடைவீர்கள். ராசிநாதன் ஐந்தாமிடத்தில் குரு உச்சம் பெற்று லாபஸ்தானத்தையும், ராசியையும் பார்வை இடுவது தொழில் நல்ல லாபம் பெறுவீர்கள். குருவின் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் அமைவது ஆன்மீக பயணம் சென்று வருவதும், தீர்த்த யாத்திரை சென்று வருவதும், மகான்களின் ஆசீர்வாதம் பெறுவதும்.. குரு மார்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
ஆறாமிடமான சூரியன் வீட்டில் கேது அமர்ந்து இருப்பது மறைமுகமான எதிரிகளின் தொல்லைகள் வந்து சேரும். பல வருடம் கூட்டாக தொழில் செய்பவர்கள் உங்களை மிட்டும் தோனியில் பேசுவது மனதிற்கு வேதனையைத் தரும். சூரியன் களத்திர ஸ்தானத்தில் அமர்வது கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். விட்டு கொடுக்காமல் பேசுவது… பிடிவாதமாக இருப்பதையும் தவிர்ப்பது நல்லது.
கூட்டுத் தொழில் பிரச்சனை வந்து பங்குதாரரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டிவரும். எட்டாமிடமான மறைவு ஸ்தானத்தில் புதனுடன் சுக்கிரன் இணைவு பெறுவது தனஸ்தானத்தையும் இருவரும் பார்ப்பது வருமானம் வரும். சிலருக்கு அதனை நேரடியாக அனுபவிக்க முடியாமல் போகும். தடைபட்ட காரியங்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் காரிய தடை வந்து செயல்பட முடியாமல் போகும் வாய்ப்பு அமையும்.
நிறங்கள்: மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
கிழமைகள்: வியாழன், திங்கள், செவ்வாய்.
சந்திராஷ்டம நாட்கள்: 11-10-2026 ஞாயிறு பகல் 11.07 முதல் 13-10-2026 செவ்வாய் இரவு 08.15 மணி வரை.
தெய்வங்கள்:ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு சிவப்பு திரி போட்டு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு முந்திரி பருப்பு 11 ஐ மாலையாக கட்டி அணிவித்து உங்களின் வேண்டுதலை சொல்லிவர, விரைவில் நன்மை நடக்கும்.
கணித்தவர்: ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM