இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக தற்போது செயற்படும் ஹசன் திலக்கரத்ன, இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரில் செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக செயற்பட்ட நிக் பொதாஸ் பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரில் இருந்து விலகுவதற்கு அண்மையில் தீர்மானித்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியின் பின்னர் நிக் பொதாஸ் மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது இருபதுக்கு -20 போட்டியை லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் செல்வதற்கு நிக் பொதாஸ் நிராகரித்தார். 

இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரில் இலங்கை அணியின் பிரதான பயற்சியாளராக ஹசன் திலக்கரத்ன செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.