எம்மில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். வேறு சிலருக்கு காய்ச்சலும் ஏற்படும். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று தங்களுக்கு ஹைட்ரோநெஃப்ரோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா..? என்பதை வைத்தியரிடம் தெரிவித்து அதற்குரிய பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முதுகு வலி, பக்கவாட்டில் வலி, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், சிறுநீருடன் குருதி கலந்து வெளியேறுதல், குமட்டல், வாந்தி, காய்ச்சல், பலவீனம் ஆகிய அறிகுறிகள் ஒன்றிணைந்து இருந்தால், உங்களுடைய சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் குழாய் வழியாக வெளியேற வேண்டிய சிறுநீர் முழுமையாக வெளியேறாமல், அங்கேயே தேக்கமடைவதாலோ அல்லது மீண்டும் சிறுநீரகத்திற்கு திரும்புவதாலோ ஏற்படக்கூடிய பாதிப்பாக அவதானிக்கலாம். இதை மருத்துவ மொழியில் ஹைட்ரோநெஃப்ரோசிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
சிறுநீரகத்தில் கல் அல்லது கல் போன்ற படிவங்கள், கட்டி ,ரத்த உறைவு பாதிப்பு, பிறவியில் ஏற்படும் குறைபாடு என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
மேலும் சிறுநீர் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டாலும் சிறுநீரகத்தை சிறுநீர்ப்பைடன் இணைக்கும் குழாய் போன்ற அமைப்புகளில் இத்தகைய அடைப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பெசிக்கோரெட்டால் ரிப்ளக்ஸ் எனப்படும் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் குழாய் வழியாக சிறுநீர் பின்னோக்கி நகர்ந்து சிறுநீரகத்திற்குள் வரக்கூடும். இதனால் இத்தகைய பாதிப்பு கடுமையை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற தருணங்களில் சிறுநீரகம் வீக்கம் அடைந்துவிடும். இது எந்த வயதிலும் ஏற்படலாம். அதேபோல் சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் வீக்கம் ஏற்படக்கூடும்.
இவர்களுக்கு வைத்தியர்கள் சிறுநீர் பரிசோதனை, குருதி பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, கே யு பி எக்ஸ் கதிர்கள் பரிசோதனை எம் ஆர் ஐ, சிடி ஸ்கேன் பரிசோதனை, எம் ஏ எஸ் எஸ் ஸ்கேன் பரிசோதனையையும் வைத்தியர்கள் பரிந்துரைக்கக்கூடும்.
இத்தகைய பரிசோதனையில் முடிவின் அடிப்படையில் நோயாளிகளுக்கு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, மருந்தியல் சிகிச்சைகள் மூலமாக நிவாரணம் வழங்குவர்.
சிலருக்கு இத்தகைய நிவாரண சிகிச்சை முழுமையான பலன் அளிக்காத போது, சிறுநீரக குழாய்களை மாற்றுவதற்கான பிரத்யேக நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டு இதற்கு முழுமையான நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் நேகா
தொகுப்பு அனுஷா.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM