தமிழக முதல்வர் விஜய் பதவி ஏற்கும் போதும், அரசியல் மேடைகளிலும், கருப்பு வண்ண மையை நெற்றியில் திலகம் இட்டு தோன்றுவது அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.
அத்துடன் அந்த திலகத்தின் பின்னணி குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் ஒருவரது வளர்ச்சியின் மேல் மற்றவர்களின் கண் திருஷ்டி இருந்தால் அதனை நீக்குவதற்கும், எதிராளிகளின் வலிமையை குறைப்பதற்கும், இது போன்ற பிரத்யேக மைகள் சோதிட முறையிலும், ஆன்மீக முறையிலும், தாந்திரீக முறையிலும் தயார் செய்யப்பட்டு, மக்கள் பாவிக்கிறார்கள். இந்த தருணத்தில் எம்முடைய செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக குறிப்புகளை சூட்சமமாக வழங்கி உள்ளனர்.
பொதுவாக தொட்டால் சிணுங்கி என்று ஒரு செடி வகையினை நாம் பயணங்களின் போது பார்த்திருப்போம். அதனை விளையாட்டாக தொட்டு, அதன் இலைகள் சுருங்குவதையும் பார்த்து ரசித்திருப்போம்.
இந்த தொட்டால் சிணுங்கி இலையை வைத்து செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
உங்களுடைய வீட்டிலிருந்து தென்கிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் பயணித்து மண்ணுடன் மண்ணாக தரையில் பறந்து விரிந்து கிடக்கும் தொட்டால் சிணுங்கி செடியை பார்த்து அவதானித்து, அதன் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் உள்ள இலைகளை அதற்குரிய முறையில் பறித்து, அதனை வீட்டிற்கு எடுத்து வந்து, அரைத்து உலர்த்த வேண்டும். அதனுடன் நெய்யை சேர்த்து திலகமாக நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது உங்களுடைய செல்வ வளம் மேம்படுவதை அனுபவத்தில் காணலாம்.
அதே தருணத்தில் தொட்டால் சிணுங்கி என்பது ராகு மற்றும் காளி தேவியின் அம்சம் என்பதால்.. அதனை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
அதே தருணத்தில் அந்த தொட்டால் சிணுங்கி இலையை பார்த்தவுடன் காலணியை கழற்றிவிட்டு, அதன் மீது பயபக்தியுடன் தொட்டவுடன் சுருங்கும் தருணத்தில், நீங்கள் மனதில் ஏதேனும் ஒரு கோரிக்கையை மட்டும் சமர்ப்பித்தால், அந்த கோரிக்கை நிறைவேறுவதையும் அனுபவத்தில் காணலாம். ஏனெனில் தொட்டால் சிணுங்கி இலை என்பது காளி தேவி மற்றும் மகாலட்சுமியின் அம்சம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM