ஷிங்கிள்ஸ் தடுப்பூசியை யார் செலுத்தி கொள்ளலாம்?

Published By: Digital Desk 2

28 Sep, 2026 | 04:01 PM
image

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலருக்கும் நோய்களை எதிர்த்து போரிடுவதற்கும்.. வராமல் தற்காத்துக் கொள்வதற்கும் தடுப்பூசியை செலுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள்.

அந்த வகையில் பேச்சு மொழியில் அக்கி என்றும், மருத்துவ மொழியில் சின்னம்மை எனப்படும் பிரத்யேக வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருக்க. ஷிங்கிள்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஹெர்பஸ் ஜோஸ்டர் எனப்படும் இத்தகைய பாதிப்பு, ஒருவகையான வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இது வலி மிகுந்ததாக காணப்படுகிறது. இது சிக்கன் பாக்ஸ் எனப்படும் சின்னமையை ஏற்படுத்துகிறது.

இத்தகைய பாதிப்பு ஒரு முறை ஏற்பட்ட பிறகு அவற்றுக்கு நிவாரண சிகிச்சை பெற்றாலும், இத்தகைய வைரஸ் கிருமிகள் எம்முடைய உடலில் செயலற்ற நிலையில் தான் இருக்கும்.

மேலும் இத்தகைய வைரஸ் தொற்று பாதிப்பு உடலின் வலது அல்லது இடது என ஏதேனும் ஒரு பக்கத்தில் தன்னுடைய அறிகுறிகளை வெளிப்படுத்தும். வலி மிகுந்த கொப்புளங்கள், எரிச்சல், கூச்ச உணர்வு ஆகியவையும் ஏற்படும். இத்தகைய பாதிப்பினை உறுதிப்படுத்த வைத்தியர்கள் பி சி ஆர் எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.

இத்தகைய பாதிப்பு ஐம்பது வயதை கடக்கும் போது எம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தால் இத்தகைய பாதிப்பு மீண்டும் உருவாவதற்கான சாத்திய கூறு அதிகம். இதன் காரணமாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஷிங்கிள்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இத்தகைய தடுப்பூசி- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறனை மேம்படுத்தி, இத்தகைய பாதிப்பை மீண்டும் வராமல் பாதுகாக்கிறது.

முதல் முறை இத்தகைய தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு இரண்டாவது முறை ஆறு மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இருப்பினும் இத்தகைய தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு முன்பு உங்களுடைய வைத்தியரை அணுகி ஆலோசனையையும், அறிவுரையையும் முறையாக பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வைத்தியர் சௌம்யா
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷ்வானோமா எனும் நரம்பில் ஏற்படும் கட்டி...

2026-11-17 13:16:12
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-11-16 15:05:28
news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47