இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை – இந்திய சங்கத்தின் சிறப்பு இராப்போசன நிகழ்வு

28 Sep, 2026 | 02:25 PM
image

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை – இந்திய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இராப்போசன நிகழ்வு கடந்த 27ஆம் திகதி கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் மற்றும் தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா பங்கேற்றார்.

இலங்கை – இந்திய சங்கத்தின் தலைவர் எஸ். ரெங்கநாதன் வருகை தந்திருந்த பிரதம அதிதி, கௌரவ விருந்தினர் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களை வரவேற்று உரையாற்றினார்.

தனது உரையில், இந்தியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் அடைந்துள்ள முன்னேற்றங்களை நினைவுகூர்ந்த அவர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் ஆன்மிக மரபுகளால் வலுப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட போதி மரக் கன்றானது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவின் உயிரோட்டமான அடையாளமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இலங்கை சிரமங்களை எதிர்கொண்ட காலங்களில் இந்தியா வழங்கிய உடனடி மற்றும் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் பாராட்டினார்.

சமூக அபிவிருத்தி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், முக்கிய வைத்தியசாலை உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல பாலங்களின் நிர்மாணப் பணிகளுக்கான இந்தியாவின் ஆதரவையும் பாராட்டினார்.

1949ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை – இந்திய சங்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிவரும் பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் மக்களுக்கிடையிலான தொடர்புகளும் மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பிரதம அதிதி, இந்திய உயர்ஸ்தானிகராலயம், சங்க உறுப்பினர்கள் மற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இராப்போசன நிகழ்வில் பெங்களூரைச் சேர்ந்த கலைஞர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இவர்கள் குரு விதுஷி ரேகா ஜகதீஷ், குரு விதுஷி ஸ்ரீமதி தனுஜா ராஜ் மற்றும் வித்வான் சேகர் ராஜேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றவர்கள்.

மேலும், “பாரத ரத்னா” எம்.எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகளான எஸ். ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோரின் சிறப்பு இரட்டையர் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்று, கொண்டாட்டத்தை மேலும் சிறப்பித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16