பிரித்திகா சஞ்சீஸ்குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒக்டோபர் 3ல்

Published By: Digital Desk 2

28 Sep, 2026 | 01:01 PM
image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் “கலாசூரி” திவ்யா சுஜேனின் மாணவி பிரித்திகா சஞ்சீஸ்குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

“லீலை இவ்வுலகு” என்ற கருப்பொருளில் அமையவுள்ள இவ்வரங்கேற்ற நிகழ்வில், இந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களான வசுதா ரவி, குரு பரத்வாஜ் மற்றும் அனந்த ராமன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனும், இசையமைப்பாளருமான “ஞானபாநு” ராஜ்குமார் பாரதியின் இசையமைப்பில் இந்த அரங்கேற்றம் இடம்பெறவுள்ளதுடன், அவர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க அபிநயக்ஷேத்ராவின் மற்றுமொரு பாரதி மார்க்கமாக அமையவுள்ளது.

கொழும்பு சைவமங்கையர் கழக அதிபர் அருந்ததி இராஜவிஜயன், வீணா நாத லய இயக்குநரும் “இசைக்கலைமணி” விருது பெற்றவருமான ராதை குமாரதாஸ், ஏழிசை காலாலயம் இயக்குநர் முதுகலைமாணி மதுரா பாலசந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வுக்கான சிறப்பு ஒளி வடிவமைப்பை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து வெங்கடேஷ் கிருஷ்ணன் வருகை தரவுள்ளார்.

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், அதன் 20ஆவது அரங்கேற்றமாக பிரித்திகா சஞ்சீஸ்குமாரின் இவ்வரங்கேற்றம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16