மகாகவி பாரதியாரின் நெறியைப் போற்றும் வகையில் உருவான “நின்னைச் சரணடைந்தேன்” எனும் நூலின் அறிமுக விழாவும், 'அபிநயக்ஷேத்ரா' அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விசேட ஆடல் ஆற்றுகை நிகழ்வும் எதிர்வரும் ஒக்ரோபர் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
இவ்விழாவில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் “ஞானபானு” ராஜ்குமார் பாரதி தலைமை தாங்கி நூலினை வெளியிட்டு வைக்கவுள்ளார்.
அத்துடன், அபிநயக்ஷேத்ராவின் மனிதநேய அமைப்பாளர் அபிராமி கைலாசபிள்ளை முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளார்.
பாரதி பற்றிய தரிசனமாக உருவாகியுள்ள இந்நூலின் அறிமுகத்துடன், அபிநயக்ஷேத்ராவின் 20 வருட கலைப் பயணத்தினைக் கொண்டாடும் வகையிலான விசேட கலை நிகழ்ச்சிகளும் இதன்போது அரங்கேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM