உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சுற்றுலா பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்து தயாரித்த 3 நாட்கள் கொண்ட உலக சுற்றுலா தின உணவுத் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றன.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற இவ்விழாவின் இறுதி நாளில், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வுகளைக் கண்டு களித்தனர். இதன் போது பல்வேறு கலை, பண்பாட்டு மற்றும் சுவாரசியமான நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதோடு, வடமாகாண சுற்றுலா பணியகத்தின் புதிய இணையதளமும் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.



































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM