யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளுக்கு சாரணர் பயிற்சியை வழங்கி, சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (25) யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணர் ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலைகள் ஆணையாளர் – வழங்கல் மற்றும் சேவைகள் பி.டி.எம்.ஜி.பி. திஸாநாயக்க, வட மாகாண சாரணர் ஆணையாளர் பி. அஜித்குமார், யாழ்ப்பாண சிறைச்சாலை பொறுப்பதிகாரி எஸ். இந்திரகுமார், சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் உறுப்பினர் வர்த்தக பிரமுகர் ஈ. எஸ். பி. நாகரெட்ணம் உள்ளிட்ட அங்கத்தவர்கள், சாரண தலைமையக மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், தேசியக் கொடி, சிறைச்சாலைக் கொடி மற்றும் சாரணர் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் சிறைச்சாலை கீதமும் இசைக்கப்பட்டன.
தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலை பொறுப்பதிகாரி எஸ். இந்திரகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, சிறைக் கைதிகளுக்கு சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அரசாங்க அதிபரும், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றுகையில்,
சிறைச்சாலையில் உள்ளவர்களை உரிய முறையில் ஆற்றுப்படுத்தி, அவர்கள் சமூகத்திற்குத் திரும்பிச் செல்லும் போது நற்பிரஜைகளாக செயற்படுவதற்கு தேவையான நல்ல பண்புகள், தலைமைத்துவத் திறன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பது இத்தகைய புனர்வாழ்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
சிலர் தங்களது கடந்தகால செயல்பாடுகளின் காரணமாக சிறைச்சாலைக்கு வரவேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தாலும், அதிலிருந்து மீண்டு தமது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் திரும்பிச் செல்லும் போது புதிய சிந்தனைகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், சாரணர் சின்னம் பெற்றவர்கள் தொடர்ச்சியாக சாரணர் பயிற்சிகளைப் பெற்று, நாட்டின் ஏனைய சாரணர் பயிற்சி நிலையங்களில் தமது பயிற்சிகளைப் பூர்த்தி செய்து, எதிர்காலத்திலும் சாரணர் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“ஒரு நாள் சாரணர்;
வாழ்நாள் முழுவதும் சாரணர்” என்ற சாரணியக் கொள்கையின் அடிப்படையில், சாரணர் பயிற்சியின் ஊடாகப் பெற்ற தலைமைத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நல்ல பண்புகளை வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்க்கையை நோக்கி முன்னேறி, நல்ல சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் வளர்த்துக்கொண்டு சமூகத்தில் பொறுப்புள்ள நற்பிரஜைகளாக உருவாக வேண்டும் என்பதே அனைவரிடமும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.டி.எம்.ஜி.பி. திஸாநாயக்க உரையாற்றியதுடன், விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் தலைமை புனர்வாழ்வு அதிகாரி பி. சுசிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM