சூத்திரதாரிகளை கண்டறியும் விசாரணையை தொடருங்கள்

27 Sep, 2026 | 03:04 PM
image

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்­பான வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட 24 பிர­தி­வா­தி­களில் 15 பேரை குற்­ற­வா­ளி­க­ளாக மூவ­ர­டங்­கிய விசேட மேல் நீதி­மன்றம் அறி­வித்­த­துடன், அவர்­க­ளுக்கு தலா 200 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­தி­ருக்­கி­றது.

அத்­துடன், அவர்­க­ளது சொத்­துக்­களும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் அர­சு­ட­மை­யாக்­கப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தி­வா­தி­களில் 9 பேரை நீதி­ப­திகள் குழாம் விடு­வித்­தி­ருக்­கின்­றது.

மேல் நீதி­மன்ற நீதி­பதி நவ­ரத்ன மார­சிங்க தலை­மையில், நீதி­பதி சுஜீவ நிசங்க, நீதி­பதி ராம­நாதன் கண்ணன் ஆகி­யோ­ர­டங்­கிய மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்­கி­யி­ருக்­கின்­றது.

குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்ட 15 பேரில் ஒரு­வ­ருக்கு 260 ஆண்­டு­கால  கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் 4 பேருக்கு தலா 240 ஆண்­டு­ கால  சிறைத்­தண்­ட­னையும் 5 எதி­ரி­க­ளுக்கு 220 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் மிகுதி 5 பேருக்கு 200 ஆண்­டு­கால சிறைத்­தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­த­லுக்கு சதி செய்­தமை, ஒத்­து­ழைப்பு வழங்­கி­யமை உட்­பட 23,270 குற்­றச்­சாட்­டுகள் மீதே இந்தத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த 5 வருட கால­மாக விசா­ரிக்­கப்­பட்ட இந்த வழக்கில் 25 பேர் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் ஒருவர் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது உயி­ரி­ழந்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து 24பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட வழக்­கி­லேயே இந்தத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் தற்­போதும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அரச புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சுரேஷ் சலே உட்­பட்ட பலரும் கைது செய்­யப்­பட்டு தற்­போது விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். இந்த விட­யத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோட்­டா­பய ராஜபக் ஷ உட்­பட்ட சில­ருக்கு வெளி­நாடு செல்­வ­தற்­கான தடையும் நீதி­மன்­றத்­தினால் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் தகவல் கிடைத்­தி­ருந்தும் அதனை தடுக்கத் தவ­றிய குற்­றச்­சாட்டின் பேரில், முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ, அரச புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி நிலந்த ஜய­வர்­தன, தேசிய புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி திஸ்ஸ மெண்டிஸ் உட்­பட்டோர் மீது 2023ஆம் ஆண்டு அடிப்­படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த மனுக்­களை விசா­ரித்த உயர் நீதி­மன்றம் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட்­ட­வர்கள், மக்­களின் அடிப்­படை மனித உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக தீர்ப்­ப­ளித்து அப­ராதம் விதித்­தி­ருந்­தது. முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு 10 கோடி ரூபா அப­ரா­தமும் ஏனை­ய­வர்­க­ளுக்கு அவர்­க­ளது தரா­த­ரத்­துக்கு ஏற்ப அப­ராதத் தொகை­களும் விதிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இத­னை­விட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகி­யோ­ருக்கு எதி­ராக மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கில் ஜூலை மாதம் 31ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தாக்­கு­தலை தடுக்கத் தவ­றிய குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டதன் அடிப்­ப­டையில் இவர்கள் இரு­வ­ருக்கும் மேல் நீதி­மன்றம் மர­ண­தண்­டனை விதித்­தி­ருந்­தது.

இவ்­வாறு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் இரு வேறு தீர்ப்­புகள் வெளி­யான நிலை­யில்தான் தற்­போது மூன்­றா­வது தீர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த தீர்ப்பில் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்டு தண்­டிக்­கப்­பட்­ட­வர்கள் தாக்­கு­த­லுக்கு சதித்­திட்டம் தீட்­டி­யமை, அதற்கு உதவி மற்றும் ஒத்­தாசை வழங்­கி­யமை, பயங்­க­ர­வாத கருத்­துகள் மற்றும் இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தைப் புரிந்­துள்­ள­தாக நீதி­ப­திகள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

தண்­டனைப் பெற்­ற­வர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்னர் பயங்­க­ர­வாத விரி­வு­ரைகள், ஆயு­தப்­ப­யிற்சி பட்­ட­றைகள், இர­க­சிய இடங்­களை பரா­ம­ரித்து வந்­தமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­த­வர்­க­ளாவர்.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே இந்தத் தீர்ப்பில் தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரிகள் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை என்றும், சூத்­தி­ர­தா­ரி­களை இனங்­கண்டு அவர்­களை தண்­டிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் தற்­போது கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேச்­சாளர் அருட் தந்தை சிறில் காமினி, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இன்­னமும் முழு­மை­யான நீதி கிடைக்­க­வில்லை. தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி, தாக்­குதல் தொடர்பில் முன்­கூட்­டியே தகவல் தெரிந்­தி­ருந்தும் அதனை தடுக்கத் தவ­றிய அதி­கா­ரிகள் மற்றும் சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு உத­வி­ய­வர்கள், பல்­வேறு தரப்­பினர் தொடர்பில் விசா­ர­ணைகள் நடக்­கின்­றன. அவர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன்னால் தண்­டிக்­கப்­பட்ட பின்­னரே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முழு­மை­யான நீதி கிடைக்கும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை சந்­தேக நப­ராக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சுரேஷ் சலே தொடர்­பிலும் உரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்று கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் ஊடகப் பேச்­சாளர் அருட் தந்தை ஜூட் கிரி­சாந்த பெர்­னாண்டோ வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்­க­மைய, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் நிலந்த ஜய­வர்­தன உள்­ளிட்­ட­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

அத்­துடன், முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக் ஷவுக்கு வெளி­நாடு செல்­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான மேல் நீதி­மன்­றத்தின் தீர்ப்பு தொடர்பில் பல்­வேறு அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் கருத்­து­களை தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் கடந்த புதன்­கி­ழமை கருத்து வெளி­யிட்ட ஐக்­கிய மக்கள் சக்­தியின் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹெக்டர் அப்­பு­ஹாமி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­குதல் தொடர்­பான நீதி­மன்ற தீர்ப்பின் மூலம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு கால்­பங்கு நீதியே கிடைத்­துள்­ளது. இன்னும் முக்­கால்­பங்கு நீதி கிடைக்­க­வில்லை. இதில் சூத்­தி­ர­தாரி என்று கூறப்­பட்­ட­வர்கள் எங்கே? இதற்கு பிர­தா­ன­மாக பணம் வழங்­கிய குழு­வினர் எங்கே? பிர­தான சூத்­தி­ர­தா­ரியை வெளிப்­ப­டுத்­தி­னால்தான் பல கேள்­வி­க­ளுக்கு விடை கிடைக்கும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

குண்டுத் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய சாரா, இந்­தி­யாவில் இருப்­ப­தாக தேசிய மக்கள் சக்­தி­யினர் கடந்த காலங்­களில் குறிப்­பிட்­டார்கள். இந்­தி­யா­வுடன் பல ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன. சாராவை இலங்­கைக்கு அழைத்து வரு­வ­தற்கு ஏதேனும் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளதா? பிர­தான சூத்­தி­ர­தா­ரியை கைது செய்­வ­தற்கு ஏதேனும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா என்றும் ஹெக்டர் அப்­பு­ஹாமி பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதே­போன்றே, ‘குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்­துக்கு அம்­பா­கவும் வில்­லா­கவும் செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு தற்­போது தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. எய்­த­வ­னான பிர­தான சூத்­தி­ர­தாரி யார் என்­பது இது­வ­ரையில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. பிர­தான சூத்­தி­ர­தாரி மற்றும் இதன் உண்­மை­யான பின்­னணி நீதி­மன்­றத்தால் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்’ என்று பாராளுமன்றத்தில்   இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பு முழுமையானது அல்ல என்பதை குறிக்கும் வகையிலேயே சகலரது கருத்துகளும் அமைந்திருக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுரேஷ் சலே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த விசாரணை தொடர வேண்டும். விசாரணையில் இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன? பிரதான சூத்திரதாரி யார்? என்ற விடயங்கள் கண்டறியப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவையே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக இருக்கின்றன.

இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள்

2026-10-11 16:09:11
news-image

யுத்த வடுக்களை நீக்குவதற்கும் நல்லிணக்கத்துக்கும் என்ன...

2026-10-04 10:22:46
news-image

சூத்திரதாரிகளை கண்டறியும் விசாரணையை தொடருங்கள்

2026-09-27 15:04:33
news-image

தமிழ்ப் பேசும் மக்கள் பேரவையின் துரித...

2026-09-20 17:19:18
news-image

ஜெனிவா கூட்டத் தொடரும் நீதிக்கான போராட்டங்களும்

2026-09-13 15:24:39
news-image

தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ஐ.நா. மனித உரி­மைகள்...

2026-09-06 15:44:48
news-image

உண்மைகளை தொடர்ந்து மறைத்து வைக்கக் கூடாது

2026-08-30 14:09:47
news-image

கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

2026-08-23 12:19:51
news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43