‘இந்­தி­யாவைத் தெரிந்து கொள்­ளுங்கள்’ வேலைத்­திட்­டத்தின் கீழ் இலங்கை வாழ் இந்­தியப் பிர­ஜை­க­ளான 18 -– 30 வயது இளை­ஞர்­க­ளுக்கு  இந்­தியா செல்­லவும்,  பல்­வேறு நிகழ்­வு­களில் கலந்து கொள்­ளவும்  வாய்ப்­ப­ளிக்­கப்­பட இருப்­ப­தாக  இந்­திய வெளி­யு­றவு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

 இந்­திய வாழ்க்கை முறை, கலா­சாரம், ஆன்­மிகம், வீர­தீர செயல்­களும் விளை­யாட்டும் ஆகிய  துறை­களில்  இந்­தி­யாவின் பல்­வேறு மாநில இளை­ஞர்­க­ளு­டனும்  இணைந்து செயற்­பா­டு­களில் ஈடு­ப­டவும்,  வர­லாறு,  கலா­சாரம், கைத்­தொழில், கல்வி ரீதி­யி­லான  முக்­கிய இடங்­க­ளுக்கு சென்று  வரவும் இதனால் வாய்ப்பு கிடைக்­க­வுள்­ளது.

www.kip.gov.in என்ற இணை­யத்­த­ளத்­தி­னூ­டாக விவ­ரங்­களைத் தெரிந்து கொள்ள  முடி­யு­மெ­னவும்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  இதற்கு விண்ணப்பிப்பதற்கான   இறுதித் திகதி நவம்பர் 19 ஆகும்.