தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எழுதியுள்ள நூலின் வெளியீட்டு விழா இன்று (3) நடைபெறவுள்ளது.

‘யதமின் பெந்தி அக்ஷர’ (மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துக்கள்) என்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு, சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.