இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முறுகல் நிலை அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்குமான மத்தியஸ்தம் வகிக்கவும், இதன்மூலம் விளிம்பு நிலையில் இருக்கும் ‘சார்க்’ கட்டமைப்பின் சரிவைத் தடுத்து நிறுத்தவும் இலங்கை தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிகூறியுள்ளார்.

பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தேமினா ஜஞ்ஜுவாவுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதைத் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் நாடுகளின் 19ஆவது அமர்வு இரத்துச் செய்யப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களைப் பரிமாறிக் கொண்டதையடுத்து, சார்க் நாடுகள் அமைப்பில் பிளவும் உண்டானது.

இதையடுத்து, சார்க் அமைப்பு கலைந்துவிடலாம் என்ற அச்ச நிலை தோன்றியது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, சார்க் அமைப்பை மீண்டும் வலுப்பெறச் செய்வதற்கு இலங்கை நேர்மையான மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்று பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.