இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் இளம் வயதிலேயே இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதை அவதானிக்கிறோம். இது தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில அரிதான வகையில் மேற்கொள்ளப்படும் இதய மாற்று சத்திர சிகிச்சை தொடர்பான விளக்கங்களையும் வைத்தியர்கள் வழங்கி உள்ளனர்.
சிலருக்கு இதயத்தின் செயல்பாடு என்பது இயல்பான அளவைவிட குறைந்துவிடும். இத்தகைய தருணத்தில் அவர்களால் நாளாந்த கடமைகளை கூட சுயமாக மேற்கொள்ளாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். உதாரணத்திற்கு அவர்களால் காலையில் எழுந்தவுடன் மேற்கொள்ளும் பல் துலக்கும் பணியை கூட செய்திட இயலாத சூழல் இருக்கும்.
இதுபோன்ற தருணங்களில் இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு நுரையீரல் அழுத்தம் காரணமாகவும் இதய செயல்பாட்டில் ஏற்பட்டிருக்கும் குறைபாடு காரணமாகவும், அவர்களால் சுவாசிப்பது, மூச்சு திணறல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கும், மாரடைப்புகளுக்கும் ஆளாக கூடும்.
இவர்களுக்கு ஹீட்டோரோடோபிக் ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்டேசன் எனும் அரிதான இதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இத்தகைய தருணத்தில் நோயாளியின் இதயத்தை அகற்றாமல் தானமாக பெறப்பட்ட மற்றொரு இதயத்தை வலது புறத்தில் பொருத்தி அதனை சீராக இயங்கச் செய்யும் அரிதான இதய மாற்று சத்திர சிகிச்சையாகும்.
இதனை மருத்துவ மொழியில் பிக்கிபேக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேஷன் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய தருணங்களில் நோயாளிக்கு தானமாக பெறப்பட்ட புதிய இதயத்தை வலது புறத்தில் பொருத்தி அதனை இடது புற இதய இயக்கத்துடன் இணைத்து விடுவார்கள். இதன் பிறகு நோயாளி - இரண்டு துடிக்கும் இதயங்களுடன் வாழத் தொடங்குவார்கள்.
பொதுவாக இத்தகைய அரிதான இதய மாற்று சத்திர சிகிச்சை ஒருவருக்கு அவருடைய இதயம் இயல்பான அளவிட அளவைவிட அதாவது 20 சதவீதத்திற்கும் குறைவான அளவில் பழுதடைந்து இயங்கிக் கொண்டிருந்தால் அல்லது நுரையீரல் குருதி அழுத்த பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால், இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
இதனிடையே உலகளவில் ஐநூறுக்கும் குறைவாகவே இத்தகைய அரிதான இதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் எம்முடைய அண்டை நாடான இந்தியாவில் இத்தகைய சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியர் ஷெரீஃப்
தொகுப்பு அனுஷா.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM