இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் கடலில்தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியது.

படகு மூழ்கியதால் செய்வதறியாது திகைத்து நின்ற மீனவர்கள் ஏழு பேரும் உயிருக்குப் போராடியபடி இருந்தனர்.

சர்வதேச கடல் எல்லையில், கொழும்புக்குத் தென்கிழக்குப் பகுதியில், 65 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது, மீனவர்கள் சிலர் உயிருக்குப் போராடியபடி இருப்பதைக் கண்ட இலங்கை மீனவர்கள், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று, ஏழு மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் காலி கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். 

இந்நிலையில், குறித்த கப்பலில் இருந்த 7 பேர் தற்போது பாதுகாப்பாக இலங்கையில் உள்ள இந்திய துதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.