SLIM DIGIS 2.6 விருது விழாவில் 7 விருதுகளை வென்ற Litmus!

Published By: Digital Desk 2

25 Sep, 2026 | 03:02 PM
image

இலங்கையின் முன்னணி சந்தைப்படுத்தல் தொடர்பாடல் விளம்பர நிறுவனமான Litmus Pvt Ltd, இம்முறை நடைபெற்ற SLIM DIGIS 2.6 விருது விழாவில் PickMe, Vision Care, Marmite, Glow & Lovely மற்றும் Knorr ஆகிய இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களுக்காக உருவாக்கப்பட்ட விளம்பரக் கருத்தாக்கங்களுக்காக 7 விருதுகளை வென்றுள்ளது.

ஒவ்வொரு வர்த்தக நாமத்தின் தேவைகளையும் துல்லியமாகப் புரிந்து கொண்டு, மக்களின் கலாசாரம், மொழி மற்றும் பழக்கவழக்கங்களை அறிந்து வர்த்தக நாமங்களை மக்களுடன் இயல்பாக இணைய வைத்தமைக்கே இவ்விருதுகள் கிடைத்துள்ளன.

இதுவரை ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட விளம்பரக் கருத்துகளைத் தமிழில் அப்படியே மொழிபெயர்ப்பு மட்டுமே செய்து வந்த விளம்பரத் துறையில், தமிழ் பேசும் மக்களின் கலாசாரம், வாழ்வியல் மற்றும் அடையாளங்களை இனங்கண்டு, அதனூடாக வர்த்தக நாமங்களை இணைத்தமைக்கு Vision Care மற்றும் Glow & Lovely ஆகிய இரு வர்த்தக நாமங்களுக்கான விருதுகளே சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பார்வைத் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வர்த்தக நாமம் பற்றிய புரிதலையும் உருவாக்கும் வகையில் "Vision Care தெளிவான பார்வைக்கு!" எனும் மையக் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரக் கருத்தாக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் பேசும் கலைஞர்களை இணைத்து உருவாக்கப்பட்டதுடன் அம்மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதுவே இம்முறை SLIM DIGIS 2.6 விழாவில் 'சிறந்த ஆக்கபூர்வமான உள்ளடக்கப் பயன்பாடு' (Best Use of Creative Content) விருதை வென்றது.

மற்றொரு கலாசாரப் பிரதிபலிப்பாக, Glow & Lovely இற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட "நல்லூர் திருவிழாவுக்கு ஊதா!" எனும் விளம்பரக் கருத்தாக்கம் அம்மக்களிடையே எதிர்பார்ப்பையும் தாண்டிய வரவேற்பைப் பெற்றது.

நல்லூர் திருவிழாவை வெறும் நிகழ்வாகப் பார்க்காமல், அதை ஊதா நிற நினைவுகளாக மாற்ற மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பர நடவடிக்கையில், ஊதா நிறக் கலாசார உடைகள், ஊதா நிற சுவரோவியங்கள், ஊதா நிறப் பரிசுகள், மற்றும் நல்லூர் வளாகச் செயல்பாடுகள் என இந்த எண்ணக்கரு மக்களுக்கு மறக்க முடியாத ஊதா நிற அனுபவத்தை Glow & Lovely ஊடாகக் கொடுத்துள்ளது.

வெறுமனே ஒரு விளம்பரத்தை மொழிபெயர்ப்பு செய்வதைத் தாண்டி, மக்கள் எதிர்பார்க்கும் மொழி, நடை, உரை மற்றும் பாணியில் ஒவ்வொரு வர்த்தக நாமத்தையும் அவர்களின் உணர்வுகளோடு இணைப்பதே மிகப்பெரிய வெற்றி என்பதை Litmus விளம்பர நிறுவனம் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் பேணும் நட்புறவு, அவர்களின் நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு வர்த்தக நாமத்தையும் மக்களிடையே பேசும் பொருளாக மாற்றி, சரியான கருத்தைச் சரியான நேரத்தில் சரியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்திகளை நன்கு அறிந்துள்ளதாலேயே, 2017-ஆம் ஆண்டிலிருந்து Litmus விளம்பர நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது என்பதற்கு இச்சாதனைகளும் சான்றளிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16