சிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரியவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் பயணித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மேலுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.