இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் குறித்த 4 மீனவர்களும் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது,  அவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து மாலை 6 மணியளவில் இந்திய மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

குறித்த மீனவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.