மரணச் சடங்கு செலவு 90 மில்லியன் டொலர்!

Published By: Devika

21 Oct, 2017 | 03:03 PM
image

தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன் டொலர் - இலங்கை நாணய மதிப்பில் சுமார் 137 கோடி - செலவில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தயாராகிவருகிறது.

மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி காலமானார். எனினும், அவரது உடல் அந்நாட்டு மன்னர்குல வழக்கப்படி ஓராண்டு காலத்தின் பின் எரித்துப் பின் புதைக்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி அவரது உடல் எரிக்கப்படவும், மறுநாள் 27ஆம் திகதி அவரது அஸ்தி புதைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுகாலமாக, மன்னரின் இறுதிக் கிரியைகளுக்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஐந்து நாள் நிகழ்வாக நடக்கவுள்ள இந்த இறுதிக் கிரியைகளுக்காக, ஆடம்பர அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவரது சாம்பல் புதைக்கப்படவுள்ள இடத்தில் தங்கத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளன.

தாய்லாந்தின் அயல் நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர்கள், அரசியல்வாதிகள் உட்பட சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலஞ்சென்ற மன்னர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக தாய்லாந்தின் மன்னராக வீற்றிருந்தவர். தாய்லாந்தின் பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் அவர் தெய்வத்துக்கு நிகரானவராகவே நோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52