பிரான்சில் இரண்டில் ஒரு பெண்களுக்கு மேல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

Odoxa நிறுவனம் மேற்கொண்ட இந்த கருத்துக்கணிப்பில் பிரெஞ்சு பெண்களில் 53 வீதமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாக தெரிவித்துள்ளனர்.

தகாத இடத்தில் தொடுவது, கட்டாயப்படுத்தி முத்தமிடுவது, பெண்களின் பின்புறங்களில் கை வைப்பது உள்ளிட்ட தாகுதல்களை 53 வீதமான பெண்களை சந்திக்கின்றனர்.

கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட பெண்களில் 91 வீதமான பெண்கள் கேள்விகளுக்கு முழுமையாக பதிலளித்துள்ளனர். 

36 வீதமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும், 38 வீதமான பெண்கள் வெளியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், 17 வீதமான பெண்கள் வேலையிடத்திலும் பா லியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கருத்துக்கணிப்பு அதிர்ச்சிமிகு தகவல்களை வெளியிட்டுள்ளது.