வீடொன்றை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான  தங்க நகைகளை  பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருரையும் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றை உடைத்து 10 லட்சம் ரூபா பெறுமதியான  தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 17 ஆம் திகதி உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையடித்து  மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை நேற்று மாலை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். 

நோர்வுட் பிரதேச குடியிருப்பொன்றின் சுவர் பகுதியில் மறைத்து  வைத்திருந்த நிலையிலேயே தங்க மாலை, தோடு, உட்பட தங்க காப்புகளும் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்படுள்ளதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை  எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.