பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சிபாரிசுகளின் பேரில் ஏழு பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றி உத்தரவிட்டுள்ள தேசிய பொலிஸ் திணைக்களம்.

இந்த இடமாற்றத்தின்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ரத்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில், கிராம சேவை அலுவலரான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது இடத்துக்கே திருக்கோவில் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.