பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க புதிய சிகிச்சை முறையை இயற்கை மருத்துவரான டொக்டர் விஷ்ணு விக்னேஸ்வரன் கண்டறிந்திருக்கிறார்.

இந்த சிகிச்சை குறித்து அவர் விளக்கம் அளிக்கும் போது,‘எம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைவதனாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.  இதற்கு இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மூலம் இந்த நோயின் பாதிப்பை வராமல் தற்காத்துக் கொள்ளமுடியும். நோய் எதிர்ப்பு சக்தியை உடனடியாக அதிகரித்துக் கொள்ள என்ஸைம்களையும், தாதுகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இதற்கு 200 மில்லி சூடான சாத்துக்குடி சாறுடன், 25 கிராம் அளவிற்கு எலக்ட்ரால் கலந்து ஒன்றரை மணி நேர இடைவெளியில் தினமும் 8 முறை குடிக்கவேண்டும். இடையே வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே சமயத்தில் இரண்டு அல்லது இரண்டரை லீற்றர் தண்ணீரை பருகலாம். இந்த சிகிச்சை முறைக்கு ‘ஜுஸ் பாஸ்டிங் ’ என்ற பெயர். இந்த சிகிச்சையை தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்தால் எம்முடைய உடலில் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி தோராயமாக 85 சதவீத அளவிற்கு உயர்ந்துவிடும். இதன் மூலம் டெங்கு காய்ச்சலுக்கான காரணமான வைரஸ் வெளியேற்றப்படுகிறது. டெங்கு காய்ச்சலுக்குரிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் இன்றும் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்படாததால் இதனை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தைப் பெறலாம்.

டொக்டர் விஷ்ணு விக்னேஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்