பொன்விழா கொண்டாடும் கதிரவன் கலைக்கழகம்

23 Sep, 2026 | 12:52 PM
image

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் இயங்கிவரும் கதிரவன் கலைக்கழகம் அதன் பொன்விழாவினை எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் பிற்பகல் 3 மணிக்கு கொண்டாடவுள்ளது.

28.04.1976ஆம் ஆண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் கலாபூஷணம், கிராமியக் கலைஞர் சி.தங்கராசாவின் தலைமையில் இளைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, இக்கழகம் உருவாக்கப்பட்டது.  

கதிரவன் கலைக்கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெறவுள்ள இப்பொன்விழா "ஊரிலிருந்து உலகம் வரை" எனும் தொனிப்பொருளில் 'வாழும் தமிழ் வாழ்க' எனும் மகுட வாசகத்தின் கீழ் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கதிரவன் முன்னேற்றத்துக்காக ஆதரவு வழங்கி, தொடர் சமூக செயற்பாட்டில் உள்ள ஐம்பது பேராளர்கள் இவ்விழாவின்போது 'கதிரவன் விருது' வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

அத்துடன் 50 ஆண்டுகால செயற்பாடுகளை உள்ளடக்கிய ஆவணமாக 'ஊரிலிருந்து உலகம் வரை' எனும் நூலும் இதன்போது வெளியிடப்படும். 

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், இந்தியா மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் விருந்தினர்கள் பங்கேற்கும் இப்பொன்விழா பண்பாட்டுப் பவனியுடன் ஆரம்பமாகி, இனிப்புப் பகிர்ந்து, ஆரம்பகால உறுப்பினர்கள் முதல் இக்கால உறுப்பினர்கள் வரை அனைவரதும் பங்கேற்பில் நடத்தப்படவுள்ளது.

அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், சமூக - சமய தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.

1976ஆம் ஆண்டு கிராமியக் கலைகளை வளர்ப்பதற்காக ஆரம்பமான இக்கழகம், காலப்போக்கில் சமூக, புராண மற்றும் இதிகாச நாடகங்களை மேடையேற்றி சமூக, ஆன்மிக, மற்றும் கல்விப் பணி என்று நகர்ந்து, வீதி நாடகம், கதிரவன் சஞ்சிகை வெளியீடு, பட்டிமன்றம் என்பவற்றையும் நடத்தி, இன்று “ஊரிலிருந்து உலகம் வரை” பல்வேறு நற்பணிகளை முன்னெடுக்கும் சமூக நிறுவனமாக மாற்றம் பெற்றுள்ளது.

இலங்கையிலும் இந்தியாவிலும் 188 பட்டிமன்றங்களை நிகழ்த்தியும், இதுவரை 2500க்கும் மேற்பட்ட வீதி நாடகங்களை ஆற்றுகை செய்தும், நூல் வெளியீடுகள், கலை நிகழ்வுகள் என பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடத்தியும், சர்வதேச தினங்களை பிரகடனப்படுத்தும் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கியும் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்த கழகமாக கதிரவன் கலைக்கழகம் காணப்படுகிறது.

இவ்வருடம் 50ஆவது ஆண்டை சிறப்பித்து 50 நிகழ்வுகளை இந்தியாவிலும் இலங்கையிலும் ஒழுங்குபடுத்தி நடத்தி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஐம்பதாவது விழாவே பொன்விழாவாக ஏற்பாடு செய்யப்படுகிறது. 

இந்தப் பொன்விழாவில் பங்கேற்க கதிரவன் உறவுகளை இரு கரம் கூப்பி, கலைக்கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-13 11:53:20
news-image

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2026-10-12 16:48:29
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-10-12 14:55:38
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-13 16:21:56
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய...

2026-10-11 11:38:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16