காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பதினான்கு வயதுச் சிறுவன் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டான்.

வாரியபொல, பாதெனியவைச் சேர்ந்த அத்துல சேனாரத்ன என்ற பதினான்கு வயதுச் சிறுவனைக் காணவில்லை என, கடந்த பதினான்காம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக குறித்த சிறுவன் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை சற்று முன், குறித்த சிறுவன் குணசிங்கபுர பேருந்து நிலையப் பகுதியில் நின்றிருந்ததைக் கண்ட பொலிஸார் அவனை மீட்டனர்.

கடந்த ஒரு வாரமாக அவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்டறியும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.