உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் எதிர்­வரும் 24 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் விசேட கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது.

உள்­ளூ­ராட்சி திருத்­தச்­சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரி­யவும் கையெ­ழுத்­திட்­டுள்ள நிலையில் வர்த்­த­மானி அறி­வித்தல் வெ ளியி­டப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் நுவ­ரெ­லியா  மாவட்­டத்தில் உள்­ளூ­ராட்சி சபை­களை

 அதி­க­ரிப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யாடல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உள்­ளூ­ராட்சி மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தலை­மையில் நடை­பெற்­றி­ருந்­தது. இந்­தக்­கூட்­டத்தில் நுவ­ரெ­லியா அம்­ப­க­முவ உள்­ளூ­ராட்சி சபை­களை பிரித்து 6 சபை­க­ளாக உரு­வாக்­கு­வ­தென்றும் ஏனைய மூன்று பிர­தேச சபை­களை தலா ஒன்­று­வீதம் அதி­க­ரித்து 6 சபை­க­ளாக மாற்­று­வது என்று முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த விடயம் குறித்து எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை மீண்டும் சந்­தித்து பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில்தான் தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக கட்சிதலைவர்களை உள்ளடக்கிய விசேட கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.