19 வய­துக்­குட்­பட்ட இலங்கை கிரிக் கெட் அணி­யா­னது, 19 வய­துக்­குட்­பட்ட ஆப்­கா­னிஸ்தான் அணியை 33 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்டு 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணத் தொடரின் காலி­றுதிச் சுற்­றுக்கு தகுதி பெற்­றது.

பங்­க­ளா­தேஷில் தற்­போது நடை­பெற்று வரும் 19 வய­துக்­குட்­பட்ட உல கக் கிண்ணத் தொடரின் குழு "பீ" க்கான போட்­டியில் இலங்கை 19 வய­துக்­குட்­பட்ட அணியும் ஆப்­கா­னிஸ்தான் 19 வய­துக்­குட்­பட்ட அணியும் நேற்­றைய தினம் மோதிக்­கொண்­டன.

சில்லெட் சர்­வ­தேச கிரிக்கெட் அரங் கில் நடை­பெற்ற இப்­போட்­டியில் இல ங்கை 19 வய­துக்­குட்­பட்ட கிரிக்கெட் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா ­னித்­தது. இதன்­படி ஆரம்ப வீரர்­க­ளாக கள­மி­றங்­கிய கவீன் பண்­டார, அவிஷ்க பெர்­னாண்டோ ஆகியோர் சிறப்­பான ஆரம்­பத்தை பெற்­றுக்­கொ­டுத்­தனர்.

இவர்கள் இரு­வரும் முதல் விக்கெட் 8.1 ஓவர்­களில் 48 ஓட்­டங்­களை பகிர்ந்­த­ வே­ளையில், அவிஷ்க பெர்­னாண்டோ 30 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். மற்­றைய ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான கவீன்

பண்­டார 20 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.

இதன் பின்னர் வந்த துடுப்­பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க 96 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­டு­களை இழந்து தடு­மா­றி­யது.

எனினும், அணித்­த­லைவர் சரித் அசல ங்க, வனிந்து அச­ரங்க ஜோடி நிதான மாகத் துடுப்­பெ­டுத்­தாடி இலங்கை அணியின்

மொத்த ஓட்ட எண்­ ணிக்கையை அதி­க­ரித்­தனர். இந்த ஜோடி 6ஆவது விக்­கெட்­டுக்­காக 62 ஓட்டங்­களை பகிர்ந்து ­கொண்­டது. 19 வய­துக்­குட்­பட்ட இலங்கை அணி 48.1 ஓவர்­களில் சகல விக்­கெட்­டு­ க­ளையும் இழந்து 184 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

துடுப்­பாட்­டத்தில் இலங்கை அணி சார்பில் தனி­ம­னி­தனாக போரா­டிய அணித்

த­லைவர் அச­லங்க பெறு­ம­தி­மிக்க 71 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொ­டுத்தார். பந்து­வீச்சில் 19 வய­துக்­குட்­பட்ட ஆப்­கா­னிஸ் தான் அணி சார்பில் சம்சூர் ரஹ்­மான் 19 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்டுகளை வீழ்த்­தினார்.

185 ஓட்­டங்­களை நோக்கி பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டு­வ­தற்­காக ஆப்­கா­னிஸ் தான் அணி சார்பில் நவீட் ஓபெய்ட்­டுடன் கரீம் ஜெனத் கள­மி­றங்­கினார். அவ்­வணி 15 ஓட்­டங்­களை பெற்­ற­வேளையில் தனது முதல் விக்­கெட்டை இழந்­தது.

எனினும் ஆப்கான் வீரர்கள் இலங்கை அணிக்கு சற்று சவால் அளிக்கும் விதத் தில் துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்த போதிலும், இலங்கை அணி­யி­னரின் நேர்த்­தி­யான பந்­து­வீச்சு மற்றும் களத்­த­டுப்பின் கார­ண ­மாக ஆப்கான் அணி சற்று தடு­மாற்­ற த்தை எதிர்­கொண்­டது.

இறு­தியில் 44. 5 ஓவர்­களில் ஆப்­கா­னி ஸ்தான் அணி­யினர் 151 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டு­க­ளையும் இழந் தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 3 விக்­கெட்­டு­க­ளை யும் அணித்­த­லைவர் அச­லங்க, அசித்த பெர்­னாண்டோ தலா இரு விக்­கெட்­டு­களையும் வீழ்த்­தினர்.

முன்­ன­தாக, 19 வய­துக்­குட்­பட்ட இல ங்கை அணி தனது முத­லா­வது போட்­டி யில்

19 வய­துக்­குட்­பட்ட கனடா அணியை எதிர்த்­தா­டி­யி­ருந்­தது. இப்­போ ட்­டியில் இலங்கை அணி 196 ஓட்­டங்­க ளால் வெற்றி பெற்­றது.

ஆப்­கா­னு­ட­னான வெற்­றியின் மூலம் குழு பீக்­கான புள்­ளிப்­பட்­டி­யலில் இலங்கை அணி 4 புள்­ளி­க­ளுடன் (நிகர ஓட்ட வேகத்தின் அடிப்­ப­டையில்) முத­லி­டத்தில் உள்­ளது. பாகிஸ்தான் அணி 4 புள்­ளி­க­ளுடன் இரண்­டா­வது இடத்தில் உள்­ளது.

இதன்­படி குழு "பீ"க்கான முதல் இடத்தை தீர்­மா­னிக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான தீர்க்­க­மான போட்டி எதிர்­வரும் 3 ஆம் திகதி மிர்­பூரில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை, 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணத் தொடரில் நேற்­றைய தினம் மேலும் 3 போட்­டிகள் நடை­பெற்­றன. இதில் இந்­திய அணி நியூ­ஸி­லாந்து அணி­யையும், நேபாளம் அணி அயர்­லாந்து அணி­யையும், பாகிஸ்தான் அணி கனடா அணி­யையும் வெற்றி பெற்­றன.

ஹெற்றிக் சாதனை 

நேபாளம் மற்றும் அயர்லாந்து அணி களுக்கிடையிலான போட்டியில் நேபாளம் கிரிக்கெட் அணி வீரரான சந்தீப்

லமிச்சான் அடுத்தடுத்து மூன்று விக்கெட் டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனை புரிந்தார்.

ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் ஹெற்றிக் சாதனை புரிந்தமை இது ஐந்தாவது சந் தர்ப்பமாகும்.