வெளியீட்டு சூழல் அமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாளம் மற்றும் அங்கீகாரத் தளமான "TruePass" கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு வெளியீட்டாளர்கள் தங்களின் டிஜிட்டல் வாசகர்களுடன் நேரடி மற்றும் நம்பகமான உறவை உருவாக்குவதற்காக நமது நாட்டிலேயே இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வின் சிறப்பம்சமாக, நாட்டின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இணைந்து 'TruePass Media Alliance' எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதில், விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட், வீரகேசரி - எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவட் லிமிடெட், ஹிரு நியூஸ், நியூஸ்பெஸ்ட், அததெரண, லிபர்ட்டி மீடியா, பேப்பர் டொட் எல்கே, கொசிப் லங்கா மற்றும் டுடே நியூஸ் ஆகிய முன்னணி வெளியீட்டாளர்கள் இணைந்துள்ளனர்.
டிஜிட்டல் வெளியீட்டாளர்கள் வாசகர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி, அவர்களுடன் நேரடியான உறவுகளை உருவாக்குவதற்கான நம்பகமான கட்டமைப்பின் அவசியத்தை இந்தக் கூட்டமைப்பு வெளிப்படுத்துகிறது.
நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்ட TruePass தளத்தின் ஊடாக, வாசகர்கள் சரிபார்க்கப்பட்ட சுயவிவரத்தை உருவாக்கி, அதில் பங்கேற்கும் ஊடகத் தளங்களை ஒரே அங்கீகார முறையின் மூலம் அணுக முடியும்.
அதாவது, ஒருமுறை அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் பல ஊடகத் தளங்களை அணுகும் வசதியை இது வழங்குகிறது.
வெளியீட்டாளர்களை பொறுத்தவரையில், இணையத்தளங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத வாசகர்களை அங்கீகரிக்கப்பட்ட வாசகர்களாக மாற்றுவதற்கும், அவர்களுடன் நேரடியான உறவுகளை உருவாக்குவதற்கும் இந்தத் தளம் உதவுகிறது.
மேலும், வாசகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளடக்கங்களை வழங்குதல், வாசகர் ஈடுபாட்டை அதிகரித்தல் மற்றும் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கும் இது அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களின் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் அவர்களின் அனுமதிக்கு முன்னுரிமை வழங்கும் அணுகுமுறையையும் TruePass நோக்கமாகக் கொண்டுள்ளது.
TruePass மற்றும் அட்ஸ்டுடியோ டொட் கிளவுட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெயோமி லொக்குலியானா உரையாற்றுகையில்,
வெளியீட்டாளர்கள்,, தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் வாசகர்களுக்கு இடையிலான உறவுகள் மாறிவரும் நிலையில், நாட்டின் ஊடகத்துறை தனது டிஜிட்டல் எதிர்காலத்தின் மீது அதிக உரிமையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.
“TruePass என்பது மற்றுமொரு உள்நுழைவு வசதியை உருவாக்குவதை விடப் பெரியது. வெளியீட்டாளர்கள் தாங்கள் சேவையாற்றும் வாசகர்களுடன் நேரடியான மற்றும் நம்பகமான உறவுகளை உருவாக்குவதற்கான கட்டமைப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்” என அவர் தெரிவித்தார்.
வெளியீட்டாளர்கள் வாசகர்களைக் கவரும் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் பல ஆண்டுகளாக முதலீடு செய்துள்ள போதிலும், அந்த வாசகர்களின் அடையாளம் மற்றும் வர்த்தக மதிப்பின் பெரும்பகுதி பிற தளங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் முன்னணி வெளியீட்டாளர்கள் இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்திருப்பது அறிமுக நிகழ்வின் முக்கிய விளைவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அட்ஸ்டுடியோவின் பணிப்பாளர் சுபோத பெரேரா உரையாற்றுகையில்,
"TruePass இன் தொழில்நுட்பம் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக கையடக்க தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்புகளைப் பயன்படுத்தி வாசகர்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை இது வழங்கும்." என்றார்.
சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஊடக மற்றும் டிஜிட்டல் துறை நிபுணர் டேனியல் ஹெஸ் உரையாற்றுகையில்,
வெளியீட்டாளர்கள் வாசகர்களுடன் நேரடியான உறவுகளை உருவாக்குவதும், அவர்களின் அனுமதியுடன் பெறப்படும் முதற்தரத் தரவுகளைப் பயன்படுத்துவதும் முக்கியமானவை என அவர் சுட்டிக்காட்டினார்.
வாசகர்களுடனான உறவுகள், தரவுகள் மற்றும் அவற்றின் மூலம் உருவாகும் வர்த்தக மதிப்பு ஆகியவற்றின் மீது அதிக கட்டுப்பாட்டைப் பேணுவதன் மூலம் ஊடக நிறுவனங்கள் தமது டிஜிட்டல் சுயாதீனத்துவத்தை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
TruePass தளத்தின் நோக்கம் அடையாள அங்கீகாரத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட வாசகர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வாசகர் ஈடுபாட்டை அதிகரித்தல், தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கங்களை வழங்குதல், விளம்பரங்கள், உறுப்பினர் திட்டங்கள், சந்தாக்கள் மற்றும் கட்டணச் சுவர் (Paywall) போன்ற புதிய டிஜிட்டல் வருமான மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கும் இது வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர முகவர் நிறுவனங்களுக்கும், வாசகர்களின் அனுமதியுடன் பெறப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் முன்னணி ஊடகத் தளங்களில் தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
நாட்டின் முன்னணி டிஜிட்டல் வெளியீட்டாளர்கள் TruePass Media Alliance ஊடாக ஒன்றிணைந்துள்ள நிலையில், நாட்டின் டிஜிட்டல் வெளியீட்டுத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடையாளம் மற்றும் முதல்தரத் தரவுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியின் தொடக்கமாக இந்த அறிமுக நிகழ்வு அமைந்துள்ளது.
அறிமுக நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சு, GovTech, தரவு பாதுகாப்பு அதிகாரசபை, ICTA மற்றும் FITIS ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும்,தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், விளம்பர முகவர் நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM