AI மனிதகுலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அர்த்தமற்றது – NVIDIA-இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங்

21 Sep, 2026 | 04:36 PM
image

உலகின் முன்னணி கிராபிக்ஸ் செயலிகளை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான NVIDIA-இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்ற அச்சங்கள் அனைத்தும் முற்றிலும் அர்த்தமற்றவை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில்,

2030-ஆம் ஆண்டிற்குள் தீவிரமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித இனம் அழியக்கூடும் என்று சில தரப்பினரின் கணிப்புகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஜென்சன் ஹுவாங், "அப்படி நடப்பதற்கு பூஜ்ஜிய சதவீத (0%) கூட வாய்ப்பு இல்லை" என்று மிக உறுதியாகக் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு, தொழில்நுட்ப வளர்ச்சியை முடக்கத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார். "நாம் அன்றாடம் பயன்படுத்தும் விமானங்கள், கார் மற்றும் மருத்துவக் கருவிகளை எவ்வாறு பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு உருவாக்குகின்றமோ  அதேபோல் தான் AI தொழில்நுட்பமும் அதன் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு 'பொறியியல் சவால்' (Engineering Problem) மட்டுமே. அதை மிகச் சரியாகக் கட்டுப்படுத்தவும், திறம்பட நிர்வகிக்கவும் மனிதர்களால் முடியும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தற்போது OpenAI, Anthropic போன்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள், கட்டுக்கடங்காத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என எச்சரித்து வரும் நிலையில், உலக டெக் சந்தையின் மிக முக்கியப் புள்ளியான ஜென்சன் ஹுவாங்கின் இந்த நேர்மறையான கருத்து, தொழில்நுட்ப உலகிற்குப் பெரும் நிம்மதியையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது  எனலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்