மருத்துவ பீட மாணவ செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரயன் ஜயலத்தை  இன்று மாலிகாகந்த மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சுகாதார அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு பிணை வழங்குமாறு மருத்துவ பீட மாணவ செயற்பாட்டு குழு இணைப்பாளர் கொழும்பு மேல்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.