அர்ச்சகரை திருமணம் செய்து கொண்டால் அரசு வழங்கும் சலுகை

Published By: Digital Desk 7

20 Oct, 2017 | 01:38 PM
image

கோயில் அர்ச்சரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 3 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

சமீபகாலமாக கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதும் சமூகத்தில் மரியாதை குறைவாக இருப்பதுமே இதற்குக் காரணம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தெலங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா பிராமண நல வாரிய தலைவரும் முதல்வரின் ஆலோசகருமான ரமணாச்சாரி கூறியதாவது,

"பொதுவாக கை நிறைய சம்பாதிக்கும் ஆண்களை திருமணம் செய்துகொள்ளவே பெண்கள் விரும்புகின்றனர்.ஊதியம் குறைவாக கிடைக்கும் கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ள பலர் தயங்குகின்றனர். இதனால் அர்ச்சகர்களுக்கு திருமணம் ஆவதில் தாமதம் ஏற்படுவதும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரம்மசாரிகளாக இருந்து விடுவதும் தெரியவந்துள்ளது.

கோயில் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ‘கல்யாண மஸ்து’ என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளார். இதன்மூலம் பிராமண குலத்தைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே செலவுக்காக 1 ரூபா  லட்சம் வழங்கப்படும்.

அதன் பிறகு புதுமண தம்பதி பெயரில் அரசு வங்கியில் 3 லட்சம் ரூபா வைப்பு செய்யப்படும். இந்தப் பணத்தை அவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் முழுமையாக எடுத்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் இவர்களின் வாழ்க்கை சிறக்கும். இந்தத் திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும்" என தெரிவித்தார்.

கோயில் அர்ச்சகர்களுக்கு நவம்பர் முதல் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என தெலுங்கானா அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10