பிரா­மண குருக்­களை திரு­மணம் செய்து கொள்ளும் மண­ம­கள்­க­ளுக்கு 3 லட்சம் ரூபாய் நிதி­ய­ளிக்­கப்­படும் என தெலுங்­கானா முதல்வர் சந்­தி­ர­சே­கர ராவ் அறி­வித்­துள்ளார். தெலுங்­கா­னாவில் உள்ள கோயில் குருக்­க­ளுக்கு திரு­மணம் நடை­பெ­று­வது பெரும் சிக்­க­லாகா உள்­ளது. குருக்கள் மற்றும் வேதம் ஓதும் நபர்­க­ளுக்கு குறைந்­த­ளவு ஊதியம் வழங்­கப்­ப­டு­வது இதற்கு காரணம் என கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் தெலுங்­கானா பிரா­மண சம்­க் ஷமா பரிஷத் அமைப்பின் கூட்டம் அதன் தலைவர் கேவி ரம­ணச்­சாரி தலை­மையில் தலை­மைச்­செ­ய­ல­கத்தில் நேற்று நடை­பெற்­றது. இதில் தெலுங்­கானா பிரா­மண சம்­க்ஷமா பரிஷத் அமைப்பின் உறுப்­பி­னர்கள் பலர் கலந்­து­கொண்­டனர்.

அப்­போது கோயிலில் ஆன்­மீக பணி­யாற்றும் குருக்­க­ளுக்கும் வேதம் ஓது­ப­வர்­க­ளுக்கும் யாரும் பெண் கொடுப்­பதில்லை என்ற குற்­றச்­சாட்டு எழுப்­பப்­பட்­டது.

குருக்­க­ளுக்கு குறை­வான ஊதியம் கொடுப்­பதும், சமு­தா­யத்தில் அவர்­க­ளுக்கு கிடைக்கும் மரி­யா­தையே இதற்கு காரணம் என்றும் அப்­போது குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

இது பிரா­மண குடும்­பத்தில் பிறந்­த­வர்­க­ளுக்கு பெரும் பிரச்­ச­ினை­யாக இருப்­ப­தா­கவும் கூறப்­பட்­டது. இதை­ய­டுத்து கோயில் குருக்கள் மற்றும் வேத பண்­டிட்­களை திரு­மணம் செய்­து­கொள்ளும் மண­ம­கள்­க­ளுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்­கப்­படும் என முதல்வர் சந்­தி­ர­சே­கர ராவ் அறி­வித்­துள்ளார். இதனை தெலுங்­கானா பிரா­மண சம்­க்ஷமா பரிஷத் அமைப்பும் உறுதி செய்­துள்­ளது.