நீர்­கொ­ழும்பு சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒருவர் தாக்­கு­த­லுக்கு உள்­ளான  நிலையில்  நீர்­கொ­ழும்பு மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கொழும்பு – - 10, மாளி­கா­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த 42 வய­து­டைய ஒருவரே தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டவாராவார். இவரின் இடது கையில் முறிவு ஏற்­பட்­டுள்­ள­துடன் வலது காலில் காயம் ஏற்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

வாகன திருட்டு சம்­பந்­த­மான குற்­றச்­சாட்டில் விளக்­க­ம­றியல் வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி தாக்குதலுக்கிலக்காகி நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.  இவர் மீதான தாக்­குதல் சம்­பவம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

தன் மீது  சிறைச்­சாலை பாது­காப்பு உத்தி­யோ­கத்­தர்­களே (ஜெயி­லர்கள்) தாக்­குதல் மேற்­கொண்­ட­தா­க பாதிக்­கப்­பட்ட கைதி  நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில்சிகிச்சை அளித்த வைத்­தி­ய­ரிடம் தெரி­வி த்­துள்ளார் அந்த வைத்­தியர் இது தொடர்­பாக வைத்­தி­ய­சாலை பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார். 

வைத்­தி­ய­சாலை பொலிஸார் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்­திற்கு அறி­வித்­ததை அடுத்து நீர்கொழும்பு பொலிஸார் சம்ப வம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்தகைதி வைத்தியசாலையின்  எலும்பு முறிவு சிகிச்சையை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.