கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் காணாமல் போன­தாக கூறப்­பட்ட கொலன்­னாவை - சால­முல்­லவைச் சேர்ந்த  இரு சிறு­மிகள் மற்றும் இளம் தாய் ஆகியோர்  வெல்­லம்­பிட்­டிய மற்றும் கம்­பஹா பொலிஸ் நிலை­யங்­களில் சர­ண­டைந்த அதேவேளை சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.  

கைதுசெய்­யப்­பட்ட ஐவ­ரையும் வெல்­லம்­பிட்டி பொலிஸார் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் டி.எம்.வெலி­கொ­ட­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர் செய்த போது அவர்­களை எதிர்­வரும் நவம்பர் மாதம் முதலாம் திக­தி ­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­தரவிட்டார். 

அத்­துடன் 14, 15 வய­து­களை உடைய இரு சிறு­மி­க­ளையும் சிறுவர் காப்­ப­கத்தில் அன்­றைய திகதி வரை தடுத்து வைக்­கவும் நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.  

இந்­நி­லையில் சிறு­மிகள் மற்றும் யுவதி காணா மல்போன­மைக்­கான காரணம் தொடர்பில் நேற்று மாலை­யாகும் போதும் பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். 

15 வய­தான சிறு­மியின்  காதல் தொடர்பு, வீட்டு வேலை­க­ளுக்­காக சிறு­மி­களை அமர்த்தும் சட்­ட ­வி­ரோத நட­வ­டிக்கை இந்த காணாமல்போன­மை யின்  பின்­ன­ணியில் உள்­ளதா என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

கடந்த சனிக்கிழமை (14 ஆம் திகதி) கொலன்­னாவை - சால­முல்ல பகு­தியைச் சேர்ந்த  19 வய­தான இளம் தாய் மாலினி வத்­சலா பெரேரா, அவ­ரது சகோ­தரி முறை­யி­லான 15 வய­து­டைய  யஷந்தி மது­ஷானி பெரேரா மற்றும் அவ­ர­க­ளது வீட்டின் அருகே வசிக்கும் 14 வய­து­டைய சரிதா சுவேதா எனும் தமிழ் சிறுமி ஆகியோர் காணாமல்போயி­ருந்­தனர். 

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஒரு­கொ­ட­வத்தை பகு­தியில் உற­வினர் வீடொன்­றுக்கு வந்­து­விட்டு, தீபா­வ­ளிக்­காக சுவே­தா­வுக்கு ஆடை கொள்வனவு செய்ய செல்வதாக கூறிவிட்டு வெளியேறியிருந்த நிலையிலேயே அவர்கள் மூவரும் இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.