வடக்கில் அன்று புலிகளுக்கு ஊதுகுழலாக செயற்பட்டு தனித் தமிழீழத்தை உருவாக்க கனவு கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தனி இராஜ்யத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழீழ உருவாக்கத்திற்கு துணைபோகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொரளையில் அமைந்துள்ள கலாநிதி என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், நாட்டில் இடம்பெறும் சமகால நிலவரங்களை பார்க்கும் போது தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை உண்மையில் இங்கு உள்ளதா? என்ற கேள்வி எழும்புகின்றது. ரவி கருணாநாயக்கவின் நிதி க்கொள்ளை விவகாரம் தொடர்பில் உண்மையை அம்பலப்படுத்திய அனிகா விஜய சூரிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையானது உண்மையை, சத்தியத்தை கூற விளைவோருக்கு ஏற்படும் கதியை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். அதுதான் இந்த நல்லாட்சியின் ஜனநாயகமா? ஜனநாயகத்தை குழிதோன்றி புதைக்கும் செயற்பாடுகளிலேயே தொடர்ந்தும் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. மத்திய வங்கி விவகாரம் உள்ளிட்ட அர்ஜுன மகேந்திரன் விடயம் தொடர்பில் ஆணைக்குழு முன்பாக ஆஜராகி உண்மை நிலையை வெளிப்படுத்தவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து புலனாவது யாதெனில் அர்ஜுன மகேந்திரனை பாதுகாக்கவே பிரதமர் முயற்சிக்கின்றார்.
அண்மைக்காலமாக அமைச்சர் அமரவீர ஊடகங்கள் மூலமாக பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றார். எம்மையும் வசைபாடி வருகின்றார். மஹிந்த அமரவீர என்பவர் ஐக்கிய தேசிய கட்சியில் ஊறிப்போன ஓர் உறுப்பினர். சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் தேசியம், அதன் மகத்துவம், அதன் கொள்கைகள் என்பன இன்று சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த அமரவீர போன்றோருக்கு எங்கே புரியப்போகின்றது? இவரைப்போன்ற பதவி மோகம் பிடித்தவர்கள் இந்நல்லாட்சி அரசாங்கத்தில் இருப்பதனாலேயே நாம் அரசோடு இணையாமல் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றோம். மஹிந்த அமரவீர தேவையற்ற பரப்புரைகளை கூறி தன்னை ஒரு வீரராக காட்டி கொள்ள முனைவது எமக்கு வேடிக்கையாக தோன்றுகின்றது. வடக்கில் நிலவும் சம்பவங்களை பார்க்கும் போது அங்கு வேறொரு நாடு உருவாகியுள்ளதா? என்ற ஐயம் எமக்கு எழும்புகின்றது. அங்கு போராட்டங்கள் நடத்த முடியாது என நீதிமன்றம் ஆணைப்பிறப்பித்துள்ள போதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். நீதிமன்றமும் பொலிஸ் சேவையும் தமது பலத்தை வடக்கில் இழந்துவிட்டதா? என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.
அன்று வடக்கில் புலிகளுக்கு ஊதுகுழலாக செயற்பட்டு தனி தமிழீழத்தை உருவாக்க கனவு கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அங்கு தமிழ் இராஜ்ஜியத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகின்றது. மைத்திரிபால தலைமையிலான அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ உருவாக்கத்திற்கு துணைபோகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM