இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

யாழ். அனலைதீவுக்கு அண்மிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.