யாழ். ஊர்­கா­வற்­றுறை- புங்­குடுதீவு மாணவி வித்­தியா படு­கொலை தொடர்­பி­லான குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை பெற்­றுக்­கொ­டுத்த விசா­ர­ணை­யா­ளர்கள் மற்றும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய பொலி­ஸா­ருக்கு நேற்று விசேட பணப் பரி­சில்கள் மற்றும் பாராட்­டுக்கள் வழ­ங்­கப்­பட்­டன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­வினால், கொழும்பில் இடம்­பெற்ற பொலி­ஸா­ருக்கு பரிசில் வழங்கும் நிகழ்­வி­லேயே இந்த பணப் பரிசும் பாராட் டும் அளிக்­கப்பட்­டன.

குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவின் அப்­போ­தைய பணிப்­பா­ள­ராக இருந்த தற்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல, விசா­ர­ணை­களை நெறிப்­ப­டுத்­திய உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பீ.ஏ. திசேரா மற்றும் பிர­தான விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க உள்­ளிட்ட 33 பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு வித்­தியா விவ­காரம் தொடர்பில் 1312500 ரூபா பணப் பரிசில் பகிர்ந்­த­ளிக்­கப்பட்­ட­துடன்  இரு பொலிஸ் மா அதிபர் கெள­ர­வங்­களும்  ஒரு­வ­ருக்கு சம்­பள அதி­க­ரிப்பும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டன.

சிறப்­பாக செயற்­பட்டு குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­திய, பொலிஸ் சேவைக்கு கீர்த்­தியை தேடிக்­கொ­டுத்த அதி­கா­ரி­களை கெள­ர­வப்­ப­டுத்தும் வித­மாக  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தலை­மையில் இடம்­பெற்ற இந்த பரி­ச­ளிப்பு நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­னா­யக்க பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார். இதன்­போது 1034 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கிய 64 பேருக்கும் இதன்­போது பரி­சில்­களும் கெள­ர­விப்­புக்­களும் வழங்­கப்பட்­டன. இதன்­போது 4 கோடியே 47 இலட்­சத்து 58 ஆ­யி­ரத்து 500 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனைவிட 257 பேருக்கு பொலிஸ் மா அதிபரின் விசேட கெளரவ சான்றிதழும், 9 பேருக்கு விசேட சம்பள அதிகரிப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.