புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க  அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கும்­போது பொய் பிர­சா­ரங்­களை ஒரு­ சில இன­வாத சக்­திகள் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன. ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் விட­யத்தில் எத்­த­கைய சவா­லையும் எதிர்­கொள்­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தெரி­வித்தார். 

சர்­வ­தேச  சதி திட்டம்  உள்­ள­தாக சிலர் பிர­சாரம் செய்­கின்­றனர்.  ஆனால் அவ்­வாறு எந்த சதி திட்­டமும் இல்லை என்­ப­தனை  தெ ளிவாக கூறு­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். 

ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற தீபா­வளி  விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

நாம் கடந்த மூன்று தசாப்­த­காலம் மிகவும் மோச­மான பய­ணத்­தினை முன்­னெ­டுத்து சென்றோம். நாட்டில் இடம்­பெற்ற யுத்­தத்­தினால்  எமது சமூ­கத்தில் ஒற்­றுமை இல்­லாமல் போனது மட்­டு­மல்­லாது எமது நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்­டது.   சர்­வ­தேச நாடு­க­ளு­ட­னான எமது நட்­பு­றவு  வீழ்ச்­சி­கண்­டது.  அவ்­வா­றான நிலையில் அனைத்­தையும்  தோற்­க­டித்து சகல மக்­க­ளையும் ஒரு அடை­யா­ளத்­துடன்  பய­ணிக்க செய்து  நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தேவை  எமக்கு உள்­ளது. 

அண்­மையில் எனக்கு எதி­ராக பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்த சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்ட சிலர் இன்று( நேற்று)  பிற்­பகல் என்­னுடன் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்­டனர். எனக்கு எதி­ராக யாழ்ப்­ப­ணத்தில் இவர்கள் போராட்டம் நடத்­திய போது அவர்­க­ளிடம் சென்று என்­னுடன் பேச்­சு­வார்த்­தைக்கு வரு­மாறு அழைப்பு விடுத்தேன். அதற்­க­மை­யவே அவர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் என்னை வந்து சந்­தித்­தனர். 

அதே­போன்று  யாழ் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சிலரும் என்னை சந்­தித்­தனர். இந்த இரு சாராரும்  பிரச்­சி­னைகள் குறித்து என்­னுடன் கலந்­து­ரை­யா­டினர். அவர்கள் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்­தனர். இதில் சில கார­ணி­களை எம்மால் நிறை­வேற்ற முடியும்.  ஆனால் சில கார­ணி­களை எம்மால் நிறை­வேற்ற இய­லாது. ஆனால் இவர்கள் என்­னுடன் வந்து கலந்­து­ரை­யாடி அவர்­களின் நிலைப்­பட்­டினை என்­னிடம் தெரி­வித்­தனர். இதனை   வர­வேற்­கத்­தக்க ஒன்­றா­கவே நான் கருத்­து­கின்றேன். 

பொது­வா­கவே  தென்­னி­லங்­கையில் வடக்கு மக்கள் குறித்து தவ­றான கண்­ணோட்­டமே உள்­ளது. அதேபோல் வடக்­கிலும் இந்த நிலைப்­பாடே உள்­ளது. குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் தரப்­பா­கவும், குழப்­பக்­கா­ரர்­க­ளா­கவும் சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால் இவ்­வா­றான கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுத்­ததன்  பின்னர் நாம் ஒவ்­வொ­ரு­வரும் எமது நிலைப்­பா­டு­களை சரி­யாக விளங்­கிக்­கொள்ள கூடி­ய­தாக உள்­ளது. பிரச்­சி­னை­களை தீர்க்கக் கூடிய நிலை­மைகள் ஏற்­ப­டு­கின்­றன. இரு தரப்­பி­னரும் பிரச்­சி­னைகள் இல்­லாது தீர்வை நோக்கி பய­ணிக்க முடி­கின்­றது. குறிப்­பாக கல்வி, சமூக கட்­ட­மைப்பு ஆகிய விட­யங்­களில்  பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­கின்­றது. 

அர­சாங்­க­மாக நாம் செயற்­ப­டும்­போது பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கும் பய­ணத்தை முன்­னெ­டுத்­துள்ளோம்.  நாட்டில் ஐக்­கி­யத்தை உரு­வாக்­கவும்,  தீர்வு ஒன்றை பெற்­றுக்­கொள்­ளவும் மக்கள் மத்­தியில் சக­வாழ்­வினை உரு­வாக்­கவும் முயற்­சிக்­கின்றோம்.   , எந்த வகை­யிலும் நாடு பிள­வு­ப­டாது, முரண்­பா­டுகள் அதி­க­ரிக்­காது அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்கும் கொள்­கையில் நாட்­டினுள் அமை­தி­யினை உரு­வாக்கும் நகர்வில்  நாம் ஈடு­ப­டும்­போது தவ­றான கருத்­துக்­களை சிலர் மக்கள் மத்­தியில் முன்­வைத்து வரு­கின்­றனர். 

மக்­களை தவ­றான பக்கம் கொண்­டு­செல்ல பொய்­யான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். மாநா­யக்க தேரர்­க­ளுக்கு தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்து அவர்­க­ளையும் குழப்­பத்தில் ஆழ்த்தும்  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அதே­போன்றே  ஏனைய மத தலை­வர்­க­ளி­டத்­திலும் தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். மிக முக்­கி­ய­மாக   இந்த அர­சியல் அமைப்பு சர்­வ­தேச சூழ்ச்­சி­யென கூறு­கின்­றனர். சர்­வ­தேசம் சொல்­வ­தற்கு அமை­யவே இங்கு அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தா­கவும் கூறு­கின்­றனர். 

ஆனால் நான் ஒன்றை கேட்க விரும்­பு­கின்றேன்.  1957-1958 களில்    எஸ்.டபிள்யூ ஆர்.டி பண்­டா­ர­நா­யக செல்­வ­நா­ய­கத்­துடன் பேச்­சு­வார்த்தை ஒன்றை முன்­னெ­டுத்து  ஒப்­பந்தம் செய்தார்.     அன்று அதி­கார பகிர்வு தொடர்பில் உடன்­ப­டிக்கை ஒன்றை செய்­து­கொள்ள முயன்ற நேரத்தில் இவர்கள் சர்­வ­தேச சூழ்ச்­சி­யிலா சிக்­கி­யி­ருந்­தனர் ?   எனவே  சர்­வ­தேச சதி ஒன்றும் இல்லை.  

இந்த நாட்டில் யுத்தம் ஒன்று உரு­வாக, விடு­த­லைப்­பு­லிகள் உரு­வாக, பிர­பா­கரன் உரு­வாக சர்­வ­தேச சூழ்ச்­சியா காரணம்? தேவை­யான நேரத்தில் தேவை­யான தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொள்ள சரி­யான தீர்­மானம் எடுக்­கா­மையின் கார­ண­மா­கவே   இந்த முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. பிர­பா­கரன் உரு­வா­கவும் விடு­த­லைப்­பு­லிகள் உரு­வா­கவும் அப்­போ­தைய தவ­றான அர­சியல் தீர்­மா­னங்­களே கார­ண­மாகும். மீண்டும் ஒரு யுத்­தத்­தினை தவிர்க்­கவும் பிர­பா­கரன் போன்று இன்­னொரு பயங்­க­ர­வாதி உரு­வா­காது இருக்­கவும்  என்ன செய்ய வேண்டும் என்­பதை அறிவு மட்­டத்தில் சிந்­தித்து தெளி­வாக தீமானம் எடுக்க வேண்டும். அனைத்து தரப்­பி­னரும் ஒன்­றாக அமர்ந்து ஒரு அறையில் இருந்து கலந்­து­ரை­யாடி தீர்­மானம் எடுக்க முடியும்.  சமூக பிரச்­சி­னைகள், மக்­களின்  பிர­தான பிரச்­சி­னைகள் என்ன என்­பதை நாம் கண்­ட­றிய இது சாத்­தி­ய­மாக அமையும். 

அதுவே சமூக அமை­திக்கும் ஒற்­று­மைக்கும் தீர்­வாக அமையும். உண்­மை­களை சரி­யாக கண்­ட­றிய வேண்டும். நாம் இன்னும் அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்­க­வில்லை. கட்­சி­களின் கருத்­துக்­க­ளையே நாம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ளோம். இதில் முக்­கி­ய­மான கார­ணி­களை கருத்தில் கொண்டு அதன் பின்னர் அனை­வரும் ஏற்­று­கொள்ளக் கூடிய ஒரு அர­சியல் அமைப்­பினை உரு­வாக்க முடியும். ஆனால் இதனை வேறு விதத்தில் சிலர் கையில் எடுத்­துக்­கொண்டு மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களை பரப்பி அர­சாங்­கத்தை குழப்ப முயற்­சித்து வரு­கின்­றனர். 

இந்த நாடு இன்று எங்கு உள்­ளது? நாம் எங்கு உள்ளோம் என்­பதை விளங்­கிக்­கொள்ள வேண்டும். இத்­தனை கால­மாக தீர்வை பெற்­றுக்­கொள்ள முயற்­சித்த போதும் இன­வாத குழப்­ப­கா­ரர்கள் கார­ண­மா­கவே நாட்டில் யுத்தம் ஒன்று உரு­வா­கி­யது. ஆகவே இப்­போ­தா­வது நாம் பிரச்­சி­னை­களை சரி­யாக விளங்­கிக்­கொண்டு தீர்வை நோக்கி பய­ணிக்க வேண்டும். மக்­களின் எதிர்­கா­லத்தை காலத்தை கருத்தில் கொண்டு யுத்தம் ஒன்று உரு­வா­வதை தடுக்கும் வகையில் நாம் தீர்­மானம் ஒன்றை எடுக்க வேண்டும். நாம் அனை­வரும் இந்த நாட்­டினை நேசிப்­ப­வர்கள்.  நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நாட்­டினை முன்­னோக்கி கொண்­டு­செல்ல வேண்டும். சந்­தே­கங்­களை தவிர்த்து அனை­வரும் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யாடி நம்­பிக்­கை­யுடன் சகோ­த­ரத்­து­வத்­துடன் சரி­யான பாதை­யினை தெரிவு செய்து நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். 

எமது நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­களை தீர்க்கும் நகர்வில் பிர­தா­ன­மாக இனங்களுக்கு  இடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. அதன் மூலமாக பலமிக்க சமுதாயம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டும். சகல மத கோட்பாடுகளிலும்   சமூகத்தை சரியாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதே வெ ளிப்படுத்தப்படுகின்றது.  

ஆகவே அரசாங்கமாக செயற்படும் போதும்   மத கோட்பாடுகள் எமக்கு காட்டியுள்ள வழிகாட்டலை பின்பற்றி அதன் மூலம் இலங்கையின் கலாசாரத்தை தெளிவாக விளங்கிக்கொண்டு   செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இலங்கையின் நான்கு மத கோட்பாடுகளை கொண்டு இலங்கையர் என்ற ஒரே பயணத்தினை நாம் முன்னெடுக்க வேண்டும்.  சகல மக்களும் எதிர்பார்க்கும் நல்லாட்சி, சமாதானம் விரைவில் முழுமையாக உருவாக வேண்டும் என இந்த தீபாவளி தினத்தில் பிரார்த்திக்கின்றேன்  என்றார்.