மீன்­பி­டித்­து­றையை முன்­னேற்ற நோர்வே அரசாங்கம் உதவும் : நோர்வே தூதுவர்

Published By: Priyatharshan

20 Oct, 2017 | 11:04 AM
image

இலங்­கையின் மீன்­பி­டித்­து­றையை நிலை­யா­ன­தாக மாற்­று­வ­தற்­கான உத­வி­களை நோர்வே தொடர்ந்தும் மேற்­கொள்ளும் என்று இலங்­கைக்­கான நோர்வே தூதுவர் தூர்­பியோன் கவு­ஸச்­சேத்த தெரி­வித்தார். 

வலி.வடக்கு, பலாலி கிழக்கில் அமைந்­துள்ள பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்க கட்­ட­டத்தை கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மீளக்­கு­டி­யே­றிய பகு­தி­களில் வாழ்­வா­தார உட்­கட்­டு­மான மற்றும் பிற துறை­களில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றத்தைக் காணும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. நான் கடந்த முறை தெல்­லிப்­ப­ழைக்கு வந்­த­போது பார்த்­த­தை­விட நிறைய மாற்­றங்­களைக் காண்­கின்றேன். சுமு­க­மாக நீங்கள் ஒன்­று­பட்­டுள்­ளீர்கள். உங்­க­ளுக்குள் ஒருங்­கி­ணைந்து முன்­னே­று­கி­றீர்கள். இவை பய­னுள்ள வழி­க­ளாகும்.

மக்கள் தங்கள் சொந்த வாழ்­வி­டங்­க­ளுக்கு மீளக்குடி­யே­று­வது  முக்­கி­ய­மா­னது. இத­னா­லேயே காணிகள் விடு­விக்­கப்­பட்ட நாள் முதல்  நோர்வே  அர­சாங்கம் மீள்­கு­டி­யே­றிய மக்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­வி­க­ளையும், வச­திப்­ப­டுத்தும் உத­வி­க­ளையும் செய்து வரு­கின்­றது. இது­வரை தெல்­லிப்­பழை, கோப்பாய், திரு­கோ­ண­மலை, சம் பூர் ஆகிய பகு­தி­களில் மீளக்­கு­டி­யே­றிய சுமார் ஆயி­ரத்து 400 குடும்­பங்­க­ளுக்­கான உத­வி­களை நாம் ஐக்­கிய நாடுகள்  அபி­வி­ருத்தி உதவித் திட்­டத்தின் துணை­யோடு வழங்­கி­யுள்ளோம்.

2015ஆம் ஆண்டு காணிகள் விடு­விக்­கப்­பட்டு மக்கள் மீள்­கு­டி­யேறத் தொடங்­கி­யது முதல் நோர்வே அர­சாங்கம் 300 மில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மான நிதியை உத­வி­யாக வழங்­கி­யுள்­ளது.

தெல்­லிப்­ப­ழையில் நோர்­வேயின் உத­வி ­யா­னது பாதிக்­கப்­பட்ட பெண்­களை நோக்­காகக் கொண்டு வழங்­கப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய நாடுகள் அபி­வி­ருத்தி உதவித் திட்­ட­மா­னது மாவட்ட மற்றும் பிர­தேச அர­சாங்க அலு­வ­லர்­க­ளுடன் முன்­னெ­டுக்கக் கூடி­ய­தாக அமைய வேண்டும். 

காணிகள் விடு­விக்­கப்­பட்­ட­வுடன் முத லில் மீளக்­கு­டி­யே­றி­ய­வர்கள் நீங்கள் என்­பதை நான­றிவேன். நீங்கள் உங்கள் சொந்த இடங்­க­ளுக்கு திரும்­பி­யி­ருப்­பது மீள் இணக்­கத்தின் முக்­கி­ய­மான அடை­யா­ள­மாகும். போருக்குப் பின்­ன­ரான சூழலில் வாழ்­வா­தா­ரத்­தையும்  சமா­தா­னத்­தையும் பொரு­ளா­தா­ரத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வது அபி­வி­ருத்­திக்கு  அடிப்­ப­டை­யா­ன­தாகும். போருக்குப் பின்­ன­ரான நிலை­மை­களில் இயற்­கை­யான வளங்­களை மையப்­ப­டுத்தி வாழ்­வா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது உணவுப் பாது­காப்பு, தொழில் வாண்மை போன்­ற­வற்­றுக்கு முக்­கி­ய­மா­ன­தாகும்.

நோர்­வே­யா­னது இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக அபி­வி­ருத்தி உத­வித்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கி­றது. சீநோர் உத­வித்­திட்­டத்தின் கீழ் வட­ப­குதி மீன்­பிடித்துறைக்கு அளித்த உதவி உங்­களில் சில­ருக்கு நினை­வி­ருக்­கக்­கூடும். சில தசாப்­ப­தங்­க­ளுக்கு முன்னர் சீநோர் உதவித் திட்­டத்தின் கீழ் பல்­வேறு செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதில் காரை­நகர் மற்றும் குரு­ந­கரில் வள்­ளங்கள் மற்றும் மீன்­பி­டி­வ­லைகள் செய்­வ­தற்­கான தொழிற்­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டன.

இப்­போது இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் நோர்வே இலங்­கை   யில் மீன்­பி­டித்­து­றையை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் வினைத்­தி­ற­னுள்­ள­தாக மாற்­று­வ­தற்­கு­மான உத­வி­களைச் செய்து வரு­கி­றது. தேசிய மீன்­பி­டிக்­கொள்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான தொழில்­நுட்ப உத­வி­க­ளையும் இலங்­கையில் மீன்­வ­ளங்­களைக் கணக்­கெ­டுப்­ப­தற்­கான உத­வி­க­ளையும் நோர்வே செய்து வரு­கி­றது. இவை இலங்­கையின் மீன்­பி­டித்­து­றையை நின்று நிலைக்­கக்­கூ­டி­ய­தாக மாற்றும் நோக்கில் செய்­யப்­படும் உத­வி­க­ளாகும்.

இன்று இந்த பல­நோக்குக் கூட்­டு­றவுக் கட்டடத்தை திறந்து வைத்து அதை மக்களி டம் கையளிப்பதில் மகிழ்வடைகின்றேன். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமை யும் என எதிர்பார்ப்பதோடு இதன் துணை யுடனும் உங்கள் கடின உழைப்புடனும் வளமான சமூகத்தை உருவாக்குவீர்கள் என்று நம்புகின்றேன். இவ்விடயத்தில் இதைச் சாத்தியமாக்கியதோடு பயனுள்ள பணிகளை முன்னெடுக்கும் ஐக்கிய நாடு கள் அபிவிருத்தி உதவித் திட்டத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் எனது  நன்றி யைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டமளிப்பு விழாவை பிற்போடுவது இளங்கலை மாணவர்களின்...

2024-05-29 01:44:39
news-image

கண்டியில் பிரபல வர்த்தகர் ஒருவர் 20...

2024-05-29 01:41:06
news-image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20...

2024-05-29 01:29:28
news-image

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும்...

2024-05-29 01:25:16
news-image

அரசியலமைப்பிற்கமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி...

2024-05-29 01:17:00
news-image

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது -...

2024-05-29 01:14:15
news-image

தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின்...

2024-05-29 01:07:01
news-image

தேர்தல் ஆணைக்குழுவினருக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி...

2024-05-29 00:12:16
news-image

கிராம சேவகர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பில்...

2024-05-28 20:44:18
news-image

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் பணம் சம்பாதிக்கவே...

2024-05-28 20:32:41
news-image

கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் இருக்கும்...

2024-05-28 20:02:37
news-image

வட்டிவீதங்களை மாற்றமின்றிப் பேணுவதற்கு மத்திய வங்கி...

2024-05-28 16:30:10