சமூக வலைத்தளங்களில் தற்போது ‘Back to the 80s’ என்ற பெயரில் 80களின் ரெட்ரோ புகைப்படங்கள் ட்ரெண்டாகி வரும் நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் 80கள் தோற்றத்திலான புகைப்படமும் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் விஜயுடன் கட்சி நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் 80களின் ஆடை அலங்காரத்தில், கிளாசிக் மெர்சிடிஸ்-பென்ஸ் வின்டேஜ் காரின் அருகில் கெத்தாக நிற்கும் ஏஐ புகைப்படம் தற்போது த.வெ.க தொண்டர்கள் மற்றும் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள இந்த ரெட்ரோ புகைப்படங்கள், 80களின் பொற்கால நினைவுகளை கண்முன்னே அச்சு அசலாகக் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
ChatGPT, Gemini போன்ற அதிநவீன ஏஐ தளங்களின் உதவியோடு இவை உருவாக்கப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, மக்களின் தினசரித் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மனித கற்பனைத் திறனுக்குப் புதிய சிறகுகளை முளைக்கச் செய்துள்ளது.
எதிர்காலத் தோற்றம், அனிமேஷன் உருவங்கள் என நம்மை வியப்பில் ஆழ்த்திய ஏஐ செயலிகள், தற்போது இணையவாசிகளை 40 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று 1980களின் ‘ரெட்ரோ’ உலகத்தில் உலா வர விட்டுள்ளன.
அக்காலத்தில் பெரும் டிரெண்டாக இருந்த அகலமான கொலர் வைத்த வண்ணச் சட்டைகள், பெல்பொட்டம் மற்றும் பூட்கட் பேண்ட்கள், சுருள் முடி அலங்காரம் மற்றும் பெரிய ஃப்ரேம் கண்ணாடிகள் என அனைத்தும் இதனூடாக மிகவும் துல்லியமாக மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன.
புகைப்படக் காட்சிப் பின்னணியில் கம்பீரமாக நிற்கும் அம்பாசிடர் கார்கள், பழமையான தெருக்கள் மற்றும் வின்டேஜ் ஸ்டுடியோ விளக்குகள் என ஒவ்வொரு நுணுக்கமும் ரெட்ரோ அழகியலைப் பிரதிபலிக்கின்றன.
இதற்கு மேலும் உயிரூட்டும் விதமாக இளையராஜாவின் கிளாசிக் பாடல்கள் மற்றும் ரஜினி, கமல், சுஹாசினி, ராதிகா ஆகியோரின் வெற்றிப் பாடல்களைப் பின்னணி இசையாக இணைத்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் ஏஐ வின்டேஜ் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM