வேதங்கள் முழங்க 17 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை (17) நடைப்பெற்று வருகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாறு மட்டுமின்றி, தமிழ்மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையமாகத் திகழும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைப்பெற்று வருகிறது.
புனித நீர் கலசங்களில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லீற்றர் புனித நீரும், மேலும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லீற்றர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது.
கும்பாபிஷேகம் விழாவுக்கான யாகபூஜைகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் திகதி தொடங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை சிறப்பு வேள்விகள் நடைபெற்று இன்றையதினம் அதிகாலை 5.30 மணிக்கு 12-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க இன்று காலை, 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் சிறப்பாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9,000 பேர் கோவில் மேல் தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காலை, 10:00 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று கோலாகலமாக நடைபெற்றுவருகின்ற நிலையில் இதில், இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் புனித நீர் டிரோன் மூலம் தெளிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்துள்ளனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM