ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார்.

விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.

அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவுண்கள் பெறுமதியுடையன. ஒவ்வொரு பொம்மைக்கும் வெவ்வேறு பெயர்களையும் சூட்டியிருக்கிறார் எவலின்!

“பொம்மைகளுக்கான வரவேற்பு மட்டுமல்ல! ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழி பேசக்கூடிய பெண்கள் யாரும் கிடைக்காததாலும்தான் பொம்மைகளை நாடினேன்” என்கிறார் எவலின்!

தனது முயற்சிக்குப் பெரு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும், 70% வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் தனது விடுதிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் கூறும் எவலின், இதுவரை ஒரேயொரு பிரச்சினைக்கு மட்டுமே ஆளாகியிருப்பதாகவும் கூறுகிறார்.

“அதீத ஆசையுடன் வந்த ஒரு வயதான நபர், உணர்ச்சி வேகத்தில் ‘அன்னா’ என்ற பொம்மையை உடைத்துவிட்டார். இங்கு வரும் பலரும் அன்னாவின் வாடிக்கையாளர்களே! இதனால், புதிய அன்னாவை வாங்குவதற்கு ஓர்டர் செய்திருக்கிறேன்” என்கிறார் எவலின்!