அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், லொஸ் ஏஞ்சலஸ் நகரில், சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கிலுள்ள சேட்ஸ்வொர்த் பகுதியில், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகித் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் பேருந்தும் வாகனமொன்றும் மோதிய விபத்து தொடர்பாக வானிலிருந்து நேரலைச் செய்தித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த காட்சி நேரலையில் பதிவாகியுள்ளது. இதன்போது செய்தி வாசிப்பாளர் கொலீன் வில்லியம்ஸ் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த நிலையில், நேரலை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டரில் பயணித்த வான்வழிச் செய்தி ஊடகவியலாளர் எலியானா மொரேனோ மற்றும் அனுபவமிக்க விமானி ஜோர்ஜ் மார்க்கினிவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகொப்டர் தரையிறங்கும் பகுதியில் விழுந்து நொறுங்கியதில், தரையில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த லொஸ் ஏஞ்சலஸ் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், காயமடைந்த இருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பில் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM