இலங்கையர் ஒருவருக்கு இந்தியா சென்னை உயர் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும் 140 000 இந்திய ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

குறித்த அபராத பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமென நீதவான் எச்சரித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த இலங்கையர் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கடத்திய குற்றத்திற்காக சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.