ஜேர்மன், இந்தோனேசியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட முகாம்

Published By: Priyatharshan

19 Oct, 2017 | 03:39 PM
image

பெருந்திரளான உதைப்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்ட வருடாந்த அலையன்ஸ் கனிஷ்ட உதைப்பந்தாட்ட முகாம் அண்மையில் இந்தோனேசியாவின் பாலி நகரிலும் ஜேர்மனியின் மியூனிச் நகரிலும் இடம்பெற்றது.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வில் ஜேர்மனி எவ்.வி. பேயர்ன் விளையாட்டுக் கழகத்தின் பிரபல வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் வழிநடத்தலில் ஆர்வமூட்டும் பயிற்சி அமர்வுகளும் இடம்பெற்றன. 

ஆர்ஜென்டீனா, ஆஸ்திரியா, பெனிலோக்ஸ், சீனா, கொலம்பியா, குரோஷியா, எகிப்து,பிரான்ஸ், ஜேர்மனி, ஹொங்கொங், ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, மலேசியா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ்,போலந்து, போர்த்துக்கல், சிங்கப்பூர், ஸ்பெயின், இலங்கை, தாய்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து 53 பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் ஜேர்மன் முகாமில் பங்குபற்றியிருந்தனர். 

இதில் பங்குபற்றியவர்களுக்கு எப்.சி. பேயர்ன் உதைப்பந்தாட்டக் கழகத்தின் உத்தியோகபூர்வ பயிற்சி மைதானத்தில் பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புக் கிட்டியதுடன் Allianz அரங்கத்தில் நேரடி Bundesliga போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையிலிருந்து நாலந்த கல்லூரியின் சமந்த் கொடித்துவக்கும் இதில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார்.

சீனா, மலேசியா, இந்தோனேசியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 49 பேர் இந்தோனேசிய முகாமில் பங்குபற்றியுள்ளனர். FC Bayern விளையாட்டுக் கழகத்தின் பிரபல வீரர்களான கிளவுஸ் ஓகென்தாலர் மற்றும் ஜியோவேன் எல்பர் ஆகியோரின் வழிநடாத்தலில் பயிற்சி அமர்வுகள் இடம்பெற்றன. இலங்கையிலிருந்து கல்கிசை புனித தோமையர் கல்லூரியின் ஜெஹான் அத்தபத்து மற்றும் நாலந்த கல்லூரியின் சமந்த் கொடித்துவக்கு ஆகியோர் இதில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர்.

இதற்குப் புறம்பாக, ஜெஹான் அத்தபத்து, சிறந்த நேர்மையான விளையாட்டு வீரருக்கான விருதையும் பெற்றுள்ளார். கட்டாரில் டோஹா நகரிலுள்ள புகழ்பெற்ற Aspire Academy இல் ஒரு வார கால உதைப்பந்தாட்டப் பயிற்சியில் பங்குபற்றும் வாய்ப்பு இதன் மூலமாக அவருக்குக் கிடைத்துள்ளது. ஏனைய 48 போட்டியாளர்களையும் தோற்கடித்தே அவர் இதில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய Allianz கனிஷ்ட உதைப்பந்தாட்ட முகாம் இடம்பெற்ற காலப்பகுதியில் களத்திற்கு உள்ளேயும் களத்திற்கு வெளியிலும் காண்பித்த மிகச் சிறந்த விளையாட்டு வீரருக்கான நேர்மை மற்றும் பண்புகள் காரணமாகவே ஜெஹான் இந்த வாய்ப்பினை வென்றுள்ளார். முகாம் இடம்பெற்ற காலப்பகுதியில் அவர் இரக்கம், மரியாதை, அன்பு, ஞானம், சமநிலை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் காண்பித்துள்ளார் என தெரிவுக் குழு கணிப்பிட்டுள்ளதுடன் களத்தில் அவர் ஏற்கனவே காண்பித்த மிகச் சிறந்த திறமைகளுக்கு மேற்குறிப்பிட்ட பண்புகள் மேலதிக சிறப்புத் தகைமைகளாக அமைந்துள்ளன.

சர்வதேச மட்டத்தில் விளையாட்டு சார்ந்த கல்வி மற்றும் புரட்சிகரமான விளையாட்டு வசதிகளைக் கொண்ட முழுமையான பயிற்சித்திட்டங்களை வழங்கி, விளையாட்டுத் துறையில் தேர்ச்சி பெற்றுள்ளதுடன் சர்வதேசரீதியாகப் புகழ்பெற்ற நிறுவனமாக Aspire Academy திகழ்ந்து வருகின்றது.

“ஜேர்மனி மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற ஆசிய Allianz  கனிஷ்ட உதைப்பந்தாட்ட முகாம்களில் 24 நாடுகளிலிருந்து கலந்துகொண்டவர்களுக்கு வாழ்நாளில் அரிதாகக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக தொழில்ரீதியான உதைப்பந்தாட்ட பயிற்சியாளர்களிடமிருந்து பயிற்சியை பெற்றுக்கொள்ளும் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது. களத்திற்கு உள்ளேயும் களத்திற்கு வெளியேயும் விலைமதிப்பற்ற அனுபவத்தை அவர்கள் பெற்றுக்கொள்வதுடன், இந்த அனுபவம் அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தும் நிலைத்திருக்கும். இந்த சாகச அனுபவத்தில் அங்கம் வகித்து, அவர்களுடைய எதிர்காலத்தை வளம்பெறச் செய்ய உதவுவதில் Allianz பெருமை கொள்கின்றது. குறிப்பாக இலங்கையிலிருந்து கலந்துகொண்டு தமது கனவை நனவாக்கியுள்ள மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்று Allianz Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேகா அலஸ் குறிப்பிட்டார்.

Allianz Lanka என்ற பெயரில் அறியப்படுகின்ற Allianz Insurance Lanka Ltd மற்றும் Allianz Life Insurance Lanka Ltd  ஆகியன ஒருங்கிணைக்கப்பட்ட நிதிச் சேவைகளில் உலகில் முன்னோடியாகத் திகழ்ந்துவருகின்ற Allianz SE நிறுவனத்தின் பூரண உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும்.

2005 ஆம் ஆண்டில் ஒரு நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் செயற்பட ஆரம்பித்த இந்நிறுவனம் தற்போது இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற காப்புறுதி சேவை வழங்குனர்களுள் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது.

தனது வாடிக்கையாளர்களின் ஆபத்து விவரங்கள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் வியாபார மூலோபாயங்களுக்கு உதவுவதுடன், உலகத்தரம் வாய்ந்த தனது உற்பத்திகள் மற்றும் சேவைகள் மூலமாக தனிப்பட்ட தீர்வுகளை வழங்குவதில் நிறுவனம் பெருமை கொள்கின்றது. உலகெங்கிலும் 70 வரையான நாடுகளில் 86.3 மில்லியன் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு 140,000 இற்கும் மேற்பட்ட Allianz ஊழியர்கள் சேவையாற்றி வருகின்றனர். Allianz நிறுவனத்தின் துறைசார் அறிவு, சர்வதேச அளவில் வியாபித்துள்ளமை, நிதியியல் பலம் மற்றும் வலிமை மீது நம்பிக்கை வைத்துள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21