வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது

16 Sep, 2026 | 02:56 PM
image

இலங்கை கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (15) மன்னார் முழங்காவில் யஹப்பார் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரண்டு  சந்தேகநபர்களும் ஒரு லொறியும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் புவனேக நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முழங்காவில் யஹப்பார் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 370 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த, மன்னார் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 48 வயதுடைய இரண்டு  சந்தேகநபர்களும் அந்த லொறியும் கைது செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், லொறி மற்றும் மீன் தொகை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40