நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: P. Saranya

16 Sep, 2026 | 02:56 PM
image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 20 இலட்சம் அமெரிக்க டொலரை நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரைச் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினமே அவரது பிணை கோரிக்கை தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் நாமல் ராஜபக்‌ஷ  சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் முன்வைத்த சமர்ப்பணங்களைக் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தின் மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் பின்னணியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்  தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40
news-image

எரிபொருள் விநியோக நெருக்கடி: நாடளாவிய ரீதியில்...

2026-10-11 15:24:39